இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞன் கைது

Published

on

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞன் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘குஷ்’ போதைப்பொருள் தொகையுடன் 28 வயதான இளைஞன் ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக நாட்டுக்கு வந்துள்ள நிலையில், அவரிடமிருந்து 2.7 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

Advertisement

கைது செய்யப்பட்டவர் 28 வயதான இலங்கை பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது பயணப் பைகளுக்குள் மறைத்து இந்தப் போதைப்பொருள் தொகை நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

 கைப்பற்றப்பட்ட போதை பொருள்   21 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி உடையது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version