இலங்கை
சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை நிதியம் நடாத்திய பரிசளிப்பு விழா!
சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை நிதியம் நடாத்திய பரிசளிப்பு விழா!
சித்தங்கேணி ஒன்றியத்தின் அனுசரணையில், சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை நிதியம் நடாத்திய வருடாந்த வாசிப்பு மாத போட்டியின் பரிசளிப்பு விழாவானது நேற்றையதினம் 02ஆம் திகதி வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் நடைபெற்றது.
மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு, இறை வணக்கம் இசைக்கப்பட்டு குறித்த நிகழ்வானது ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரை, விருந்தினர்கள் உரைகள், சிறார்களது கலை நிகழ்வுகள் மற்றும் பரிசில்கள் வழங்கல் என்பனவும் இடம்பெற்றன.
சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையின் தலைவர் திருச்சிற்றம்பலம் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்ற இந்த பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக “செந்தமிழ் சொல்லருவி” சந்திரமௌலீசன் லலீசனும், சிறப்பு விருந்தினராக சித்தங்கேணி உலக ஒன்றியத்தின் பிரதிநிதி காந்தபவனி முரேஷும் கலந்து சிறப்பித்ததுடன், இந்த நிகழ்வின் சிறப்புரையை சித்தங்கேணி சிறீகணேசா வித்தியாலய அதிபர் கலைவாணி அருள்மாறன் ஆற்றினார்.
சித்தங்கேணி உலக ஒன்றியத்தினர், சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையினர், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் என பலரும் இந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டனர்.