பொழுதுபோக்கு

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு தான், ஆனா சினிமாவுக்கு இல்ல: தமிழ் படத்தில் ஹிட்டான இந்தி பாடல்கள்!

Published

on

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு தான், ஆனா சினிமாவுக்கு இல்ல: தமிழ் படத்தில் ஹிட்டான இந்தி பாடல்கள்!

தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றது. இன்றும் நடந்து வருகிறது. ஆனால், இந்த எதிர்ப்பு சினிமாவிற்கு இல்லை என்பது பல இடங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது, சினிமாவிற்கு மொழிகள் தடையல்ல என்பது போல நாம் எல்லா மொழிகளிலும் திரைப்படங்கள் பார்த்து வருகிறோம். ஏன் தற்போது கொரியன் மொழியில் வெளியாகி வரும் அனிமி வெப் தொடர்களை கூட நாம் ரசித்து பார்த்து வருகிறோம். இப்படி தமிழ் படங்களில் இடம்பெற்று நாம் ரசித்து பார்த்த இந்தி பாடல்கள் பல இருக்கின்றன. நண்டுமகேந்திரன் இயக்கிய படங்களில் ’நண்டு’  திரைப்படம் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு திரைப்படமாகும். எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் திரைப்படமாக எடுத்தவர்களில் மகேந்திரனே முதலானவர். சில இயக்குநர்களின் படங்களைப் பார்ப்பதற்கு வேறு வகை மனவலிமை தேவைப்படும். மகேந்திரன் அத்தகைய மனவலிமையைக் கோரும் திரைமொழியாளர். வட இந்திய இளைஞனுக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் ஏற்படும் காதல், திருமணம், இறப்பினால் நேரும் பிரிவு ஆகியவற்றை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கும்.இந்த படத்தில் சுரேஷ், அஸ்வினி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருந்தன. இந்த படத்தில் ’கேசே ஹகும், குச்சு ஹெகனே கஹும்’ என்ற இந்தி பாடல் இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.வறுமை நிறம் சிவப்புகடந்த 1980-ஆம் ஆண்டு இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வறுமையின் நிறம் சிவப்பு’. இந்த படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, பிரதாப் போத்தன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த  ‘து ஹை ராஜா’ இந்தி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தசாவதாரம்இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தசாவதாரம்’. இந்த படத்தில் கமல் பத்து வேடத்தில் நடித்திருப்பார். இதில் நடிகை அசின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஹிமேஷ் ரேஷாமியா இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தது. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஓ ஹோ சனம்’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version