விளையாட்டு
தாயின் உடல்நிலையை மறைத்து மகளின் வெற்றிக்காக உழைத்த தந்தை: அமன்ஜோத் சிங்கின் நெகிழ்ச்சிப் பின்னணி!
தாயின் உடல்நிலையை மறைத்து மகளின் வெற்றிக்காக உழைத்த தந்தை: அமன்ஜோத் சிங்கின் நெகிழ்ச்சிப் பின்னணி!
ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பையை இந்தியா வென்ற தருணத்தில், இந்திய ஆல்-ரவுண்டர் அமன்ஜோத் சிங்கின் (Amanjot Singh) குடும்பம் ஒரு நெகிழ்ச்சியான இக்கட்டான சூழலைச் சந்தித்து வந்தது தெரிய வந்துள்ளது. அமன்ஜோத்தின் தந்தை பூபிந்தர் சிங், அவரது 75 வயதான தாய் (அமன்ஜோத் பாட்டி) பகவந்திக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தியை, மகள் உலகக் கோப்பையில் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக அவரிடம் மறைத்துள்ளார்.மகளின் தூணாக இருந்த பாட்டிஅமன்ஜோத் தெருவில் உள்ள சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த நாள் முதல், அவரது பாட்டி பகவந்திதான் பலமாக இருந்துள்ளார். மொஹாலியில் உள்ள அவர்களின் இல்லத்தின் அருகே இருக்கும் பூங்காவில் யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்க, பாட்டி ஒரு நாற்காலியில் அமர்ந்து அமன்ஜோத்தை உற்சாகப்படுத்துவார். கடந்த மாதம் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பாட்டியின் உடல்நலக்குறைவு குறித்து அமன்ஜோத் திடம் தெரிவிக்காமல், சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் நேரத்தைச் செலவழித்துள்ளார் தந்தை பூபிந்தர் சிங்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க“எனது தாயார் பகவந்தி, அமன்ஜோத் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய நாள் முதல் அவளுக்குப் பெரும் பலமாக இருந்தார். தற்போது உலகக் கோப்பை வெற்றி இந்த இறுக்கமான சூழலில் எங்களுக்கு ஒரு மருந்தாக வந்துள்ளது,” என்று பூபிந்தர் சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்துள்ளார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி மும்பையில் உலகக் கோப்பையை வென்றபோது, பாட்டிக்கு ஆட்டத்தின் தகவல்கள் தொடர்ந்து கிடைப்பதை பூபிந்தர் சிங் உறுதி செய்தார்.ஸ்கேட்டராக இருந்து ஆல்-ரவுண்டராக மாறிய பயணம்அமன்ஜோத் சிங் ஆரம்பத்தில் ஸ்கேட்டராகவும் ஹாக்கி வீராங்கனையாகவும் விளையாடினாலும், கிரிக்கெட்டிலும் ஆர்வம் காட்டினார். 2016-ம் ஆண்டு அண்டை வீட்டார் ஒருவர் ஆலோசனை வழங்கியதைத் தொடர்ந்து, பூபிந்தர் சிங் தனது மகளை சண்டிகரில் உள்ள அகாடமிக்கு அனுப்ப முடிவு செய்தார். “அமன்ஜோத்துக்கு பயிற்சிக்கு தேவைப்படும் அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்பதற்காக நான் கூடுதலாக வேலைகளை பார்ப்பேன். மொஹாலியில் இருந்து சண்டிகரில் உள்ள அகாடமிக்கு அவளை அழைத்துச்சென்று மீண்டும் அழைத்து வருவேன். பின் அவளுக்கு ஒரு ஸ்கூட்டியை வாங்கிக்கொடுத்தோம். அப்போது அவள் என்னிடம், ‘அப்பா, கவலைப்படாதே, நான் பெரியவளாகிவிட்டேன்’ என்று சொல்வாள்” என சிங் நினைவுகூர்ந்தார்.பயிற்சியாளர் நாகேஷ் குப்தா (தற்போது பி.சி.சி.ஐ. லெவல் 2 பயிற்சியாளர்) அமன்ஜோத்தின் பந்துவீச்சு நுணுக்கங்கள் குறித்து பணிபுரிந்தது உடன், அவருடைய சிறந்த பேட்டிங் பார்த்து அவர் ஒரு ஆல்-ரவுண்டராக உருவாக முடியும் என்று ஆரம்பத்திலேயே உணர்ந்தார். அமன்ஜோத் 2019-20 சீசனில் சண்டிகர் கிரிக்கெட் சங்கத்திற்காக (UTCA) சிறப்பாக விளையாடினார். இது அவருக்கு இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பெற வழிவகுத்தது.காயத்திலிருந்து மீண்டெழுந்து வெற்றி2023-ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரின் மகளிர் டி20ஐ அறிமுகப் போட்டியிலேயே ‘ஆட்ட நாயகி’ விருதைப் பெற்று அமன்ஜோத் சர்வதேச அரங்கில் அடியெடுத்து வைத்தார். அதே ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியால் WPL ஏலத்தில் எடுக்கப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக, அடுத்த ஒரு வருடத்தில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தக் காயம் மற்றும் கையில் தசைநார் காயம் காரணமாக 8 மாதங்களுக்கும் மேலாக அவர் விளையாடாமல் இருந்தார்.உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 6-வது விக்கெட்டுக்கு அணி 124/6 என்ற நிலையில் இருந்தபோது களமிறங்கி அரை சதம் அடித்தார். அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த ஃபீப் லிட்ச்பீல்டின் முக்கியமான விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார்.பூபிந்தர் சிங் தனது மனைவி ரஞ்சித் கவுர், மற்ற குழந்தைகள் கமல்ஜோத் கவுர், குர்கிர்பால் சிங் ஆகியோருடன் பாட்டியின் உடல்நிலையைப் பார்த்துக்கொள்வதில் இரவு முழுவதும் விழித்திருப்போம் என்று கூறினார். “என் தாய்தான் அமன்ஜோத்துக்கு மிகப்பெரிய ஆதரவாளர். அவர் குணமடைந்ததும், அமன்ஜோத்துக்கு அனைத்து அன்பையும் அள்ளி வழங்குவதையும், இந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடுவதையும் அவர் உறுதி செய்வார்,” என்று பூபிந்தர் சிங் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.