டி.வி

திரும்பவும் நீங்க நடனம் ஆட போக கூடாது.! ரம்யாவை எச்சரித்த பிரஜின்

Published

on

திரும்பவும் நீங்க நடனம் ஆட போக கூடாது.! ரம்யாவை எச்சரித்த பிரஜின்

பிக் பாஸ் சீசன் 9_ இல் கலந்து கொண்ட போட்டியாளர்களில்  பிரவீன் காந்தி, நந்தினி, அப்சரா, ஆதிரை  மற்றும் கலையரசன் ஆகியோர் வெளியேற்றப்பட்டதால் ஆட்கள் குறைய, திவ்யா, சாண்ட்ரா, அமித், பிரஜின் என்ற நான்கு பேரை  உள்ளே அனுப்பி வைத்தார் பிக் பாஸ். இவர்கள் பிக் பாஸ் மேடையில் பில்டப் கொடுத்து உள்ளே சென்றனர். இவர்கள் உள்ளே சென்றால்தான் தெரியும் யார் யாரை கிழிக்க போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. அவர்கள் சொன்னது போலவே உள்ளே சென்று மொத்த ஹவுஸ்மேட்சையும் ஆட்டி வைத்திருந்தனர். பிக் பாஸ் வீட்டில் தற்போது இருக்கும் போட்டியாளர்களின் நிலை பற்றி தாங்கள் வெளியில் இருந்து பார்த்தவற்றை  பகிர்ந்தனர்.   இதனால் நாங்க சொல்ல வேண்டியதை அப்படியே நீங்கள் செய்து விட்டீர்களே என்று ரசிகர்கள்  பேசி வருகின்றார்கள்.இந்த நிலையில், நடன கலைஞரான ரம்யா ஜோவிடம் பேசிய பிரஜின், திரும்பவும் நீங்க நடனமாடக்கூடாது எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறியுள்ளார். மேலும் நான்  நீங்க பேசினது, நீங்க சொன்ன கஷ்டங்கள் எல்லாவற்றையும் பார்த்தேன். இனிமேல் இப்படி ஒரு நிலை வரக்கூடாது. இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இனி மேடைகளில் நடனமாட  போகக் கூடாது என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version