இலங்கை

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 1,314 பேர் கைது!

Published

on

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 1,314 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் கடந்த 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த சோதனைகளில் இருந்து 1 கிலோகிராம் 202 கிராம் ஐஸ், 863 கிராம், 137 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும்  குஷ் உள்ளிட்ட பல போதைப்பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 31 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது. அவர்களில் நான்கு பேருக்கு எதிராக சட்டவிரோத சொத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

Advertisement

போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களாக அடையாளம் காணப்பட்ட 8 நபர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version