வணிகம்
பிரதமர் மோடியின் ₹1 லட்சம் கோடி ‘ஆர்.டி.ஐ. நிதி’ திட்டம் துவக்கம்: நிறுவனங்களில் முதலீடு செய்யாது- பின் எப்படி செயல்படும்?
பிரதமர் மோடியின் ₹1 லட்சம் கோடி ‘ஆர்.டி.ஐ. நிதி’ திட்டம் துவக்கம்: நிறுவனங்களில் முதலீடு செய்யாது- பின் எப்படி செயல்படும்?
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் (R&D) தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி, ₹1 லட்சம் கோடி மதிப்பிலான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க நிதியை (Research, Development and Innovation – RDI Fund) இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைத்தார்.அரசின் ‘விக்சித் பாரத் 2047’ (வளர்ந்த பாரதம் 2047) தொலைநோக்குப் பார்வையை முன்னெடுப்பதற்காகக் கொள்கை வகுப்பாளர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் உலகளாவிய சிந்தனையாளர்களை ஒன்றிணைக்கும் முதல் ‘எமர்ஜிங் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாட்டில்’ (ESTIC) இந்த அறிவிப்பு வெளியானது. (RDI) நிதி செயல்படும் விதம்: நிறுவனங்களில் நேரடி முதலீடு இல்லைபாரம்பரிய நிதி வழங்கும் திட்டங்களைப் போலல்லாமல், இந்த ₹1 லட்சம் கோடி (RDI) நிதியானது தொழில்கள் அல்லது ஸ்டார்ட்அப்களில் நேரடியாக முதலீடு செய்யாது. அதற்குப் பதிலாக, ஒரு இரண்டு அடுக்கு கட்டமைப்பு மூலம் மூலதனத்தை வழிநடத்தும்.முதல் அடுக்கு (First Level): அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF) கீழ் ஒரு சிறப்பு நோக்க நிதி (Special Purpose Fund) உருவாக்கப்படும். இந்த ₹1 லட்சம் கோடி மொத்த நிதியும் இதன் கட்டுப்பாட்டில் இருக்கும். அதாவது, இது ஒரு வங்கிக் களஞ்சியம் போலச் செயல்பட்டு, நிதியைப் பாதுகாக்கும்.இந்த (RDI) நிதியத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (Department of Science and Technology) நிர்வகிக்கும்.இரண்டாம் அடுக்கு (Second Level): சிறப்பு நோக்க நிதியில் இருந்து மூலதனம் நேரடியாக நிறுவனங்களுக்குச் செல்லாது. அதற்குப் பதிலாக, அவை இரண்டாம் நிலை நிதி மேலாளர்கள் (Second-Level Fund Managers) மூலம் திருப்பி விடப்படும்.இந்த நிதி மேலாளர்களில் மாற்று முதலீட்டு நிதிகள் (AIFs), மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் (DFIs) மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) போன்றவை அடங்கும்.இந்த நிதி மேலாளர்களுக்கு உதவுவதற்காக, நிதி, வணிகம் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய சுயாதீனமான முதலீட்டுக் குழுக்கள் இருக்கும்.இந்தக் குழுக்களின் ஆலோசனையின்படி, மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் புத்தாக்கத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து, நிதி மேலாளர்கள் மூலதனத்தை முதலீடு செய்வார்கள்.இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியா இனி தொழில்நுட்பத்தை நுகரும் நாடாக இல்லாமல், தொழில்நுட்ப மாற்றத்தை முன்னெடுக்கும் ஒரு முன்னோடியாக மாறியுள்ளது என்றார். மேலும், இந்த நிகழ்வின்போது, இந்தியாவின் அறிவியல் சாதனைகளை முன்னிலைப்படுத்தும் காபி டேபிள் புத்தகத்தையும் (Coffee Table Book) நாட்டின் எதிர்கால அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இலக்குகளை கோடிட்டுக் காட்டும் தொலைநோக்குப் ஆவணத்தையும் (Vision Document) பிரதமர் மோடி வெளியிட்டார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!