இந்தியா

‘பிரமிக்க வைக்கும் வெற்றி’… மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மோடி, ஸ்டாலின் வாழ்த்து

Published

on

‘பிரமிக்க வைக்கும் வெற்றி’… மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மோடி, ஸ்டாலின் வாழ்த்து

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர். 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.திங்கட்கிழமை அதிகாலை வரை நீடித்த இறுதிப் போட்டியில், DY பாட்டில் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையைக் கைப்பற்றியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காகப் பிரதமர் மோடி இந்திய அணிக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.“ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றி பிரமிக்க வைக்கிறது. இறுதிப் போட்டியில் பெண் வீராங்கனைகளின் ஆட்டம் மிகுந்த திறமையுடனும் நம்பிக்கையுடனும் இருந்தது. இந்தத் தொடர் முழுவதும் அணி அசாதாரணமான அணி உணர்வையும் மன உறுதியையும் வெளிப்படுத்தியது. நமது வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி எதிர்கால சாம்பியன்களை ஊக்குவிக்கும். #WomensWorldCup2025,” என்று பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.A spectacular win by the Indian team in the ICC Women’s Cricket World Cup 2025 Finals. Their performance in the final was marked by great skill and confidence. The team showed exceptional teamwork and tenacity throughout the tournament. Congratulations to our players. This…மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி: தனது எக்ஸ் பதிவில், நமது பெண்கள் அணி வரலாறு படைத்து, பில்லியன் கணக்கான இதயங்களைத் தொட்டுவிட்டனர். உங்கள் வீரம், மனோதிடம் மற்றும் நேர்த்தியான ஆட்டம் இந்தியாவுக்குப் புகழைக் கொண்டு வந்துள்ளதுடன், எண்ணற்ற இளம் பெண்களை அச்சமின்றி கனவு காணவும் ஊக்கப்படுத்தியுள்ளது. நீங்க கோப்பையை மட்டும் தூக்கவில்லை; தேசத்தின் உணர்வுகளையே தூக்கி நிறுத்தியுள்ளீர்கள்.ஜெய் ஹிந்த்! ” என்று தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி திரௌபதி முர்மு: தனது எக்ஸ் பதிவில், “2025-ம் ஆண்டு ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! அவர்கள் முதல் முறையாக அதை வென்று வரலாறு படைத்துள்ளனர். இன்று அவர்களின் திறமைக்கும் செயல்திறனுக்கும் ஏற்ற பலனைப் பெற்றுள்ளனர். இந்த தருணம் பெண்கள் கிரிக்கெட்டை இன்னும் உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லும்” என்று தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து: உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திறமை, அமைதி மற்றும் குழுப்பணியின் அற்புதமான வெளிப்பாட்டிற்காக இந்திய மகளிர் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்; அடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்கும் வரலாற்று வெற்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.What a moment for Indian cricket! 🇮🇳India reigns supreme as our women in blue lift the ICC Women’s World Cup! 🏆Heartiest congratulations to #TeamIndia on this extraordinary triumph, a magnificent display of talent, composure, and teamwork.This victory will inspire… pic.twitter.com/0BeB5oibkbஇந்திய கிரிக்கெட்டின் திருப்புமுனைத் தருணம்தீப்தி ஷர்மா இப்போட்டியில் முக்கியமான அரை சதம் அடித்ததுடன், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். தீப்தி ஷர்மாவின் 5-வது விக்கெட்டை, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பின்னோக்கி ஓடிச்சென்று நம்ப முடியாத கேட்ச் பிடித்து, இந்தப் போட்டியைத் தகுந்த முறையில் முடித்து வைத்தார்.தொடர் முழுவதும் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த, காயமடைந்த பிரத்திகா ராவலுக்குப் பதிலாக அரையிறுதியில் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா, இப்போட்டியில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோரராக இருந்தார். அவர் 2 முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஷஃபாலியின் அதிரடியான 87 ரன்களைத் தொடர்ந்து, தீப்தி ஷர்மா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோரின் சண்டையிடும் மனப்பான்மையுடன் கூடிய ஆட்டத்தால் இந்தியா 298/7 என்ற சவாலான இலக்கை எட்டியது.ஜெமிமா ரோட்ரிகஸ் (24) மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (20) ஆகியோர் பெரிய ஸ்கோரை மாற்றத் தவறியதால் இந்திய இன்னிங்ஸ் தடுமாறியது. அப்போது, தீப்தி (58 ரன்கள், 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்), ரிச்சா (24 பந்துகளில் 34 ரன்கள், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) ஆகியோர் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் குவித்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.இந்தியா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்தது இது 3-வது முறையாகும். இதற்கு முன், 2005 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது. இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணி பல சவால்களைச் சந்தித்தது. லீக் சுற்றில் அடுத்தடுத்து 3 தோல்விகள், தொடர் வெற்றியாளர்களான ஆஸ்திரேலியா எடுத்த பெரிய ஸ்கோர் மற்றும் தென் ஆப்பிரிக்கக் கேப்டன் லாரா வோல்வார்ட்டின் ஆக்ரோஷமான ஆட்டம் என வெளியேறும் நிலைமைக்கு பலமுறை தள்ளப்பட்டது. இருப்பினும், இந்திய வீராங்கனைகள் நம்பிக்கை கொண்டு, போராடி, கோப்பையை வென்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version