இலங்கை

பொதுமக்களின் முறைப்பாடுகளினால் 20 நீதித்துறை அதிகாரிகள் பணி நீக்கம் !

Published

on

பொதுமக்களின் முறைப்பாடுகளினால் 20 நீதித்துறை அதிகாரிகள் பணி நீக்கம் !

மேல் நீதிமன்ற நீதிபதி, நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் உட்பட நீதித்துறை சேவை ஆணையகத்தின் இருபது அதிகாரிகள், அவர்களின் பணிகளிலிருந்து முற்றாக நீக்கப்பட்டுள்ளனர். 

இதில் ஏழு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், மற்றவர்கள் பணிநீக்கம் அல்லது கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர்.  நீதித்துறை சேவையில் உள்ளவர்களுக்கு எதிராக பொதுமக்கள் அளித்த முறைப்பாடுகள் மீதான விசாரணைகளைத் தொடர்ந்தே, இந்த பணி நீக்க  சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

Advertisement

இந்தநிலையில், மேல் நீதிமன்றத்தில் தற்போது பத்து வெற்றிடங்கள் உள்ளதாகவும், அதே நேரத்தில் நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் சுமார் 60 வெற்றிடங்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version