பொழுதுபோக்கு
மொத்த பணமும் திவால், அம்மா, சகோதரி அடுத்தடுத்து மரணம்: டாப் சீரியல் நடிகை சாமியார் ஆன சோகம்!
மொத்த பணமும் திவால், அம்மா, சகோதரி அடுத்தடுத்து மரணம்: டாப் சீரியல் நடிகை சாமியார் ஆன சோகம்!
என்னதான் சின்னத்திரை நடிகைகள் வெளியில் ஜொலித்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளும் சிக்கல்களும் உள்ளன. இந்த சிக்கல் மற்றும் சோகத்தால் பலரும் துறையைவிட்டு வெளியேறும் நிலை ஏற்படுகிறது. அப்படி ஒரு நடிகை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.சின்னத்திரை தொடர்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் நுபுர் அலங்கார். ஜெய்பூரைச் சேர்ந்த இவர் பள்ளி காலத்திலேயே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நடிப்பு – நடனம் இரண்டின் மீது தீரா காதல் கொண்ட இவர், கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் செய்வது, விளம்பரங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார்.பின்னர் சின்னத்திரை தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததன் மூலம் பிரபல சீரியல்களில் நடித்தார். ‘சக்திமான்’, ‘கர் கி லக்ஷ்மி பேட்டியான்’, ‘தியா அவர் பாட்டி ஹம்’ என 150-க்கும் அதிகமான சீரியல்களில் நடித்துள்ளார். ‘சாவரியான்’ போன்ற சில திரைப்படங்களிலும் நுபுர் அலங்கார் நடித்துள்ளார். 27 ஆண்டுகள் தொடர்ந்து சின்னத்திரையில் பணியாற்றிய நுபுர் அலங்கார் திடீரென கடந்த 2022-ம் ஆண்டு சீரியலில் நடிக்க மாட்டேன் என்ற முடிவெடுதார். அதாவது, சீரியல் மூலம் கிடைத்த பணத்தை வங்கியில் நடிகை நுபுர் அலங்கார் சேமித்து வைத்த நிலையில் அந்த வங்கி திவால் ஆனதால் நிதி நெருக்கடிக்கு உள்ளானார். தொடர்ந்து, அவரது தாய் மற்றும் சகோதரி அடுத்தடுத்து மரணமடைந்ததால் உடைந்து போன நுபுர் அலங்கார் ஆன்மிக பாதைக்கு திரும்ப முடிவு செய்தார். குடும்ப வாழ்க்கையை துறந்து துறவியாக செல்ல திட்டமிட்டார். தனது பெயரை பீதாம்பர மா என மாற்றிக் கொண்டார்.தொடர்ந்து, இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்ட நுபுர் அலங்கார் 3 ஆண்டுகள் இமயமலை, குகை, காடுகளில் தியானம் செய்தார். தற்போது இமயமலையில் எளிமையான வாழ்வை வாழ்ந்து வருகிறார். குறிப்பிட்ட அளவில் உடைகள். செலவுக்கு இமயமலை ஆசிரமத்திற்கு வருபவர்களிடம் யாசகம் பெற்று தனது அன்றாட வாழ்வை கழித்து வருகிறாராம்.இது தொடர்பாக நுபுர் அலங்கார் பேசியபோது, “நான் சந்தோஷமாக இருக்கிறேன். ஆடம்பரமின்றி வாழ்ந்து வருகிறேன். இயற்கையுடன் இணைந்து வாழ்வது அமைதியை தருகிறது. அத்துடன் தெளிவும் பிறக்கிறது. யாசகம் பெறுவதால் என்னிடம் இருக்கும் கர்வம் அழிகிறது. தெய்வீகத்துடன் கலப்பது தான் இந்த வாழ்வின் நோக்கமாக கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.