இலங்கை
வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்படும்போது பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் நாடாளுமன்ற ஊழியர்கள்!
வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்படும்போது பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் நாடாளுமன்ற ஊழியர்கள்!
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்பிக்கும் காலத்தில் நாடாளுமன்ற ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற நிர்வாகத்தை மறுசீரமைப்பது தொடர்பான குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
மறுசீரமைப்பு குறித்த குழு அறிக்கை ஏற்கனவே நாடாளுமன்றத் துறைத் தலைவர்களுக்கு மேலும் கவனிப்புக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்றத்தில் 09 துறைகள் உள்ளன, அவற்றில் சுமார் 850 ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை