இலங்கை
வவுனியா பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு; விசாரணை தீவிரம்
வவுனியா பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு; விசாரணை தீவிரம்
வவுனியா பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் அநுராதபுரம், ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் அற்புதராஜா தெரிவித்தார்.