இலங்கை
ஹொரணையில் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
ஹொரணையில் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
இரத்தினபுரி ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் இன்று (2) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
12 போர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தற்போது ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.