சினிமா

3 ஹீரோயின்களுடன் நடிக்கத் தயாராகும் நாகார்ஜுனா.. எந்தப் படத்தில் தெரியுமா? வைரலான அப்டேட்

Published

on

3 ஹீரோயின்களுடன் நடிக்கத் தயாராகும் நாகார்ஜுனா.. எந்தப் படத்தில் தெரியுமா? வைரலான அப்டேட்

தெலுங்கு திரையுலகின் எவகிறீன் ஹீரோ, “கிங்” நாகார்ஜுனா தனது 100வது திரைப்படத்துடன் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார். தற்போது இந்த “King 100” என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படம் குறித்து வெளியான புதிய தகவல்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.சினிமா வட்டாரங்களின் தகவலின் படி, இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருவதுடன், இதில் மூன்று முன்னணி நடிகைகள் இணைந்துள்ளனர் என்பது தற்போது பாலிவுட் வட்டாரத்தின் ஹாட் டாபிக் ஆக உள்ளது. நாகார்ஜுனா தெலுங்கு சினிமாவில் பல வருடங்களாக தன்னுடைய கவர்ச்சியாலும், நடிப்புத் திறமையாலும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இப்போது, தனது 100வது படமான “King 100” மூலம் தனது கரியரில் ஒரு முக்கிய மைல்கல்லை அடைகிறார். இதற்காக அவர் மிகுந்த ஆர்வத்துடனும், கவனத்துடனும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.“King 100” படத்தில் மூன்று முக்கிய நடிகைகள் இணைந்துள்ளனர் என்பது தற்போது வெளியாகியிருக்கும் தகவல். முதலில், பிரபல நடிகை தபு (Tabu) முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்போது மீண்டும் இருவர் இணைவது ரசிகர்களுக்கு பெரும் பரிசாக கருதப்படுகிறது. தபுவுடன் சேர்ந்து, மற்றொரு திறமையான நடிகையான சுஷ்மிதா பட் இப்பொழுது இப்படத்தில் இணைந்துள்ளதாக சமீபத்திய அப்டேட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும், மூன்றாவது முன்னணி நடிகையுடன் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version