பொழுதுபோக்கு

OTT: துப்பறிவாளன் படம் பிடிக்குமா? சீனுக்கு சீன் பரபரப்பு நிறைந்த இந்த படங்களையும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

Published

on

OTT: துப்பறிவாளன் படம் பிடிக்குமா? சீனுக்கு சீன் பரபரப்பு நிறைந்த இந்த படங்களையும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

இந்த வார இறுதியை விறுவிறுப்பும், சஸ்பென்ஸும் நிறைந்த துப்பறியும் படங்களைப் பார்த்து கொண்டாட நீங்கள் தயாரா? வீட்டிலேயே அமர்ந்து, த்ரில்லர் மற்றும் மிஸ்டரி திரைப்படங்களின் ரசிகர்களுக்காக, ஓடிடி தளங்களில் உள்ள தரமான ஆக்ஷன் மற்றும் துப்பறியும் படங்களின் பட்டியலை இங்கே தொகுத்துள்ளோம். திரில்லர், க்ரைம், மிஸ்டரி என அனைத்தும் கலந்து, உங்களை இருக்கையின் நுனிக்கு கொண்டுவரும் இந்த படங்களைப் பற்றி பார்க்கலாம். பெல்பாட்டம் (Bellbottom): 2021-ல் வெளிவந்த இந்த ஆக்ஷன், திரில்லர் திரைப்படம், ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அமேசான் பிரைம் மற்றும் எம்எக்ஸ் பிளேயர் ஓடிடி தளங்களில் இதை நீங்கள் பார்த்து ரசிக்கலாம். சீனுக்கு சீன் விறுவிறுப்பு குறையாமல் செல்லும் இந்த கதை உங்களை நிச்சயம் கட்டிப் போடும்.டிடக்டிவ் போம்கேஷ் பக்‌ஷை (Detective Byomkesh Bakshy) (2015): ஆக்ஷன், க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் என பல வகைகளை உள்ளடக்கியது 2015-ல் வந்த இந்த துப்பறியும் திரைப்படம். நீங்கள் ஒரு கிளாசிக் துப்பறியும் கதைக்கு ரசிகராக இருந்தால், அமேசான் பிரைம் ஓடிடியில் உள்ள இந்தப் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!டிடக்டிவ் உஜ்வாலன் (Detective Ujjwalan): மலையாளத்தில் வெளிவந்த, மிகவும் பேசப்பட்ட தரமான துப்பறியும் திரைப்படம் இது. நீங்கள் நெட்பிளிக்ஸ் அல்லது அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் இந்தத் திரைப்படத்தைப் பார்த்து, ஒரு புதிய அனுபவத்தைப் பெறலாம்.ஸ்ரீகாகுலம் செர்லாஹொம்ஸ் (Srikakulam Sherlockholmes): கடந்த ஆண்டு வெளிவந்த இந்தத் தெலுங்குத் திரைப்படம், காமெடி மற்றும் திரில்லர் கலந்த ஒரு புதுவிதமான துப்பறியும் அனுபவத்தை உங்களுக்குத் தரும். விறுவிறுப்புக் காட்சிகளால் நிறைந்த இந்தப் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் கண்டு மகிழலாம்.சி.ஐ.டி ராமச்சந்திரன் ரிட்டைர்ட் எஸ்.ஐ(CID Ramachandran Retd SI): இதுவும் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு திரில்லர் திரைப்படம். ஓய்வுபெற்ற CID அதிகாரியைச் சுற்றிய கதைக்களம் உங்களை ஈர்க்கும். இந்தப் படமும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.மனோரமா: சிக்ஸ் ஃபீட் அண்டர்(Manorama: Six Feet Under): 2007-ல் வெளிவந்த இந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம், ஒரு வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டது. ஆழமான மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் இந்தத் திரைப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் எம்எக்ஸ் பிளேயர் ஓடிடிகளில் பார்த்து ரசிக்கலாம். இந்த வார இறுதியில், இந்த விறுவிறுப்பு நிறைந்த துப்பறியும் திரைப்படங்களைப் பார்த்து உங்கள் நேரத்தை பயனுள்ளதாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றிக்கொள்ளுங்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version