உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 08 பேர் பலி!

Published

on

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 08 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இன்று அதிகாலை பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்த நிலையில், அதிகாலை உறங்கிக்கொண்டிருந்த பலரும் வீடுகளை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

சுமார் 180 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் 2,200 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version