உலகம்
ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்படும் இலவச மின்சார திட்டம்
ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்படும் இலவச மின்சார திட்டம்
வீடுகளுக்கு தினமும் 3 மணி நேரம் இலவச மின்சார வழங்கும் சோலார் ஷேரர் திட்டத்தை ஆஸ்திரேலியா அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
ஆஸ்திரேலியாவில் 2026 ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் எரிசக்தி சேமிப்பு திட்டத்தின் கீழ், சூரிய மின்சக்தி பேனல்கள் இல்லாத வீடுகள் உள்பட, அனைத்து வீடுகளுக்கும் தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் இலவச சூரிய மின்சாரம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக அந்நாட்டின் எரிசக்தித்துறை மந்திரி கிறிஸ் போவன் கூறியுள்ளார்.
ஜூலை 2026 க்குள் சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் வீடுகளின் கூரையில் சூரியசக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. உச்சப் பகல் வேளைகளில் மின்சாரச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும் அளவுக்கு அவற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தியாகிறது.
————————————————————————————
The Australian government is set to introduce a solar sharer scheme that will provide 3 hours of free electricity per day to homes.
Under an energy conservation scheme expected to be implemented in Australia in 2026, a scheme will be introduced to provide at least three hours of free solar power per day to all homes, including those without solar panels, the country’s Energy Minister Chris Bowen has said.
The solar sharer scheme is said to be introduced by July 2026. Almost four million homes in Australia have solar panels installed on their roofs. They generate enough electricity to significantly reduce electricity costs during peak hours.
————————————————————————————
ඕස්ට්රේලියානු රජය විසින් නිවාස සඳහා දිනකට පැය 3 ක නොමිලේ විදුලිය ලබා දෙන සූර්ය බලශක්ති බෙදාගැනීමේ යෝජනා ක්රමයක් හඳුන්වා දීමට නියමිතය.
2026 දී ඕස්ට්රේලියාවේ ක්රියාත්මක කිරීමට අපේක්ෂිත බලශක්ති සංරක්ෂණ යෝජනා ක්රමයක් යටතේ, සූර්ය පැනල නොමැති නිවාස ඇතුළුව සියලුම නිවාස සඳහා දිනකට අවම වශයෙන් පැය තුනක් නොමිලේ සූර්ය බලශක්තිය ලබා දීමේ යෝජනා ක්රමයක් හඳුන්වා දෙන බව එරට බලශක්ති අමාත්ය ක්රිස් බෝවන් පවසා තිබේ.
2026 ජූලි වන විට සූර්ය බලශක්ති බෙදාගැනීමේ යෝජනා ක්රමය හඳුන්වා දෙන බව කියනු ලැබේ. ඕස්ට්රේලියාවේ මිලියන හතරකට ආසන්න නිවාසවල වහල මත සූර්ය පැනල සවි කර ඇත. ඔවුන් උපරිම වේලාවන් තුළ විදුලි පිරිවැය සැලකිය යුතු ලෙස අඩු කිරීමට ප්රමාණවත් විදුලිය ජනනය කරයි.
லங்கா4 (Lanka4)