இலங்கை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தல்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தல்!
கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது படகுகளுடன் விடுவிக்க இலங்கை அரசாங்கத்துடன் உடனடி இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும் அவர்களது மூன்று மீன்பிடி படகுகளையும் நேற்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
மேலும், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் அவர்களது நாட்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
குறித்த மீனவர்கள் தற்போது காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, 114 மீனவர்களும் 247 படகுகளும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளன என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின் அவர்களை விடுவிக்க இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை