பொழுதுபோக்கு
எமனுக்கே புரியாத பாஷை, அந்த மொழியில் பாடிய டி.எம்.எஸ்: இந்த பாட்டு ஆண்களுக்கு தான்!
எமனுக்கே புரியாத பாஷை, அந்த மொழியில் பாடிய டி.எம்.எஸ்: இந்த பாட்டு ஆண்களுக்கு தான்!
அந்த காலத்தில் தமிழில் வெளியான திரில்லர் படங்களில் டாப் 10 பட்டியலில் ‘அதே கண்கள்’ திரைப்படத்திற்கு இடம் உண்டு. ஏ.சி.திருலோசந்தர் இயக்கத்தில் கடந்த 1967-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை பயத்தின் உச்சிக்கே கொண்டு சென்ற படம் தான் ‘அதே கண்கள்’. இந்த படத்தில் ரவிச்சந்தர், காஞ்சனா, நாகேஷ், மேஜர் செளந்தரராஜன், எஸ்.வி.ராமதாஸ் உட்பட பலரும் நடித்திருந்தனர்.ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் பெரும் சாதனை படைத்தது. ’மெஹர்பன்’ என்ற படத்திற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் மிகப்பிரமாண்டமான வீடு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதன் அழகை ரசித்த மெய்யப்ப செட்டியார் அந்த வீட்டை அப்படியே வைத்திருந்தார். இதை பார்த்த இயக்குநர் திருலோசந்தர் அந்த வீட்டில் வைத்து நடக்கும்படியே முழு த்ரில்லர் கதையும் எழுதியிருந்தார்.ஒரு பணக்கார வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள், பகீர் பின்னணி, பிளாஸ்பேக் இவற்றை மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டிருக்கும். இப்படம் வெளியாகி சக்கை போடு போட்டது. இப்படம் நடிகர் ரவிச்சந்திரனின் கேரியரில் சூப்பர் ஹிட் படமாகும் அதிக வசூலை குவித்த படமாகும் அமைந்தது. இந்நிலையில், ‘அதே கண்கள்’ படத்தில் எமனுக்கே புரியாத மொழியில் டி.எம்.எஸ் பாட்டு பாடியுள்ளார். இதுகுறித்து நேர்காணலில் அவர் பேசியதாவது, ”ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான அதே கண்கள் படத்தில் இசையமைப்பாளர் வேதா நல்ல அழகான பாட்டுகள் எல்லாம் கொடுத்தார். அவருடன் பணிப்புரிவது எனக்கு மிகவும் பிடிக்கும். சிரித்துக் கொண்டே பேசுவார். நல்ல பாடுகிறாய் என்று உற்சாகமளிப்பார். அப்படி பட்ட இசையமைப்பாளர்களிடம் எல்லாம் பாடினேன். அந்த படத்தில் ’பொம்பள ஒருத்தி இருந்தாலாம், பூதத்த பாத்து பயந்தாலாம், பாடலில் ஹீரோயும் அவருடைய உதவியாளரும் பெண்களை வர்ணித்து பாடிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஹீரோவிற்கு நான் பாடினேன். அதில், ஏதாவது ஒன்று உளற வேண்டும். ஆனால், யாருக்கும் அர்த்தம் புரியக் கூடாது என்று வேதா சார் சொன்னார். அப்போது நான் சொன்னேன் எமனுக்கே புரியாத பாஷை இருக்கிறது. அதுதான் செளராஷ்டிரா மொழி. அந்த இடத்தில் உளறுவது போன்று இருக்கும் அதில் ஒரு மொழியும் அடங்கியிருக்கும் என்றேன். இந்த பாடலை பார்த்ததும் என்னய்யா இது புது மொழியா இருக்கு என்று ஏ.வி.எம் மெய்யப்ப செட்டியார் ரொம்ப சந்தோஷப்பட்டார்” என்றார்.