சினிமா
கம்ருதீன்- பிரவீன் இடையே ஏற்பட்ட சண்டை Prank-ஆ… வைரலான வீடியோவால் ஷாக்கில் ரசிகர்கள்.!
கம்ருதீன்- பிரவீன் இடையே ஏற்பட்ட சண்டை Prank-ஆ… வைரலான வீடியோவால் ஷாக்கில் ரசிகர்கள்.!
பிக்பாஸ் சீசன் 9 தற்போது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சியில் நடைபெறும் சண்டைகள், டாஸ்க் மற்றும் உணர்ச்சிமிக்க தருணங்கள் பார்வையாளர்களுக்கு புதிய சுவாரஸ்யத்தை வழங்குகின்றன. பிக்பாஸ் வீடு எப்போதும் சர்ச்சையுடனும் அதிர்ச்சிகளுடனும் நிரம்பியிருக்கிறது. ஆனால் சமீபத்தில் வெளியான ப்ரோமோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக இருக்கும் கம்ருதீன் மற்றும் பிரவீன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு ‘பிராங்க்’ செய்ய முடிவு செய்தனர். அதாவது, மற்ற போட்டியாளர்களை ஏமாற்றி ஒரு பெரிய சண்டை பிடிப்பது போல காட்டுவது தான்.அதுபோல, அந்த பிராங்க் ஒரு உண்மையான சண்டையாகவே தெரிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து கூச்சலிட்டுக் கொண்டனர், அதனால் வீட்டின் மற்ற போட்டியாளர்கள் பெரும் பதற்றம் அடைந்து கொண்டனர்.சண்டையின் தீவிரம் அதிகரிக்க, வீட்டின் சூழ்நிலையும் திடீரென பதற்றமாக மாறியது. சில போட்டியாளர்கள் அவர்களை பிரிக்க முயன்றனர். சிலர் அதிர்ச்சியுடன் ,நின்று பார்த்தனர். இந்நிலையில் இவை அனைத்தும் பிராங்க் என தற்பொழுது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.