பொழுதுபோக்கு
கேரக்டரை தவறாக பேசும் திவாகர்… தயவு செய்து அவர வெளிய அனுப்புங்க; தொடர்ந்து வலியுறுத்தும் ரசிகர்கள்
கேரக்டரை தவறாக பேசும் திவாகர்… தயவு செய்து அவர வெளிய அனுப்புங்க; தொடர்ந்து வலியுறுத்தும் ரசிகர்கள்
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 20 போட்டியளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். பொதுவாக திரைப்பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக பங்கேற்கும் நிலையில் சீசன் 9 நிகழ்ச்சியில் சமூக வலைதள பிரபலங்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய அந்த நாள் முதல் பிரச்சனைகள் வெடித்து வருகிறது.வழக்கமாக பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகள் இருக்கும் , இருந்தாலும் இந்த சீசன் பிரச்சனை மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியாக உள்ளது. மக்களே தயவு செய்து பிரச்சனை எல்லாம் நிறுத்துங்க என்று சொல்லும் அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. எப்போதும் இல்லாமல் பிக்பாஸ் சீசன் 9-யை மக்கள் மிகவும் வெறுப்பதாக கூறப்படுகிறது.நீங்க என்னதான் கத்துனாலும் நான் திருந்தவே மாட்டேன் என்று பார்வதியும் திவாகரும் நடந்து கொண்டிருக்கிறார்கள். திவாகர் பொதுவாக தன்னை குறித்து தற்பெருமை பேசி வருகிறார். இந்நிலையில், தான் வெளியே தெரிய வேண்டும் என்பதற்காகவே பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சனைகளை செய்து வருகிறார். முதலில் திவாகருக்கு என்று ஒரு பேன் பேஸ் இருந்தது. ஆனால், தற்போது அவரது ரசிகர்களே அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.Prajean making Darbees Shake 🤣🤣🤣#BiggBossTamil9#biggbosstamilpic.twitter.com/rIPtzrqy4Aஇந்நிலையில், தற்போது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், வைல்டு கார்டு போட்டியாளர் சாண்ட்ராவுக்கும் திவாகருக்கும் மோதல் வெடிக்கிறது. அதில், சாண்ட்ரா, திவாகரை பார்த்து பேட் கேரக்டர் என்றால் மூஞ்சிய பாத்து சொல்லு என்கிறார். அதற்கு திவாகர் நீங்க கிண்டல் பண்றத தான் நான் அங்கே சொன்னேன் என்கிறார். பிளாஸ்மா முன்னாடி பேசுனதா இங்கே கொண்டு வரக்கூடாது என்று திவாகர் அதிகாரம் செய்கிறார். அதற்கு சாண்ட்ரா என்னை பற்றி பேசினால் நான் கேட்பேன் என்கிறார்.WC #Sandra & #Divya are going to make #Diwakar & #VJParvathy stronger contestants than before!The way it was approached wasn’t right!! #BiggBossTamil9#BiggBoss9Tamilpic.twitter.com/pqZ2TKgk0cமற்றொரு வீடியோவில், உங்களிடம் நான் எதுவுமே கேட்கவில்லை, நீங்கள் தான் இடையில் வந்து பேசுகிறீர்கள் என்று பிரஜினை திவாகர் சொல்கிறார். இடையில் கேட்கக் கூடாது என்று ரூல் இல்லை என பிரஜின் சொல்கிறார். மேலும், பிரஜினை மிரட்டுவது போன்று பேசுவதாக திவாகர் சொல்கிறார். இப்படி பிரச்சனை ஏற்படுகிறது. பிக்பாஸ் வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், இந்த திவாகரை தயவு செய்து வெளிய அனுப்புங்க. ஏன் இன்னும் உள்ளே வைத்திருக்கிறீர்கள்? இவர் ரொம்ப ஓவரா பண்றாறு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.