இலங்கை
க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு!
க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு!
க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்ற நடவடிக்கைகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் பரீட்சைகள் முடியும் வரை இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தடை காலத்தில் சமூக ஊடங்களில் போலி வினாத்தாள்கள் இடுகையிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களம், பொலிஸ் திணைக்களம் ஊடகா தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிறப்பு தேவையுடைய விண்ணப்பத்தார்களுக்கு பரீட்சை எழுதுவதற்கு சிறப்பு வசதிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 05ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த ஆண்டு 246,521 பாடசாலை மாணவர்களும், 94,004 தனியார் விண்ணப்பத்தார்களும் பரீட்சைக்கு தோற்ற உள்ளதாகவும், மேலும் இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைகளுக்காக 2362 தேர்வு மையங்களும், அவற்றுடன் 325 ஒருங்கிணைப்பு மையங்களும், 32 பிராந்திய சேகரிப்பு மையங்களும் நிறுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.