இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் சாரதி திடீர் கைது

Published

on

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் சாரதி திடீர் கைது

கடந்த  வருடம்  மாவீரர்களின் திருவுருவப்படங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சாரதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட பொலிஸாரினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்ட, சம்பவத்தில் உருத்திரபுரம் வட்டாரத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமாகிய பாரதிதாசன் எழில்வேந்தன் கைதாகியுள்ளார்.

Advertisement

அதன் பின்னர் நேற்று( 3) நீதிமன்றில் முன்னிலையான நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இம்மாதம் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் குறித்த சூழலில், கடந்த வருட சமபவத்திற்கு எழிவேந்தன் கைதான சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

பொலிஸாரின் இத்தகைய நடவடிக்கையானது கடந்த கால அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய நிகழ்வுகளை அச்சுறுத்தும் வகையிலேயே நடந்து கொள்கின்றதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version