பொழுதுபோக்கு

நான் உங்களை டார்ச்சர் பண்றேன்; அது எனக்கும் தெரியும், ஆனா நிறுத்த முடியல; இளையராஜா உருக்கம்!

Published

on

நான் உங்களை டார்ச்சர் பண்றேன்; அது எனக்கும் தெரியும், ஆனா நிறுத்த முடியல; இளையராஜா உருக்கம்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் 80-களில் இருந்து தற்போது உள்ள தலைமுறையினர் வரை அனைவரும் ரசித்து மகிழும் படியான பாடல்களை எழுதி வருகிறார். இசைக்கு தன்னை முழுமையாக அர்பணித்த இளையராஜா ‘சிம்பொனி’ இசையும் இயற்றி யாரும் படைக்காத சாதனையை படைத்துள்ளார்.இளையராஜாவுடன் ஒரு படம் பண்ணிவிட மாட்டோமா என்ற ஆசையில் பல இயக்குநர்கள் இன்றும் இளையராஜா வீட்டை சுற்றி வருகின்றனர். இளையராஜா தலைக்கனம் பிடித்தவர் என பலரும் கூறுவார்கள். இசைக்காக தன்னையை அர்ப்பணித்தவருக்கு கொஞ்சம் தலைக்கனம் இருப்பதில் தப்பு இல்லையே என்பது ரசிகர்களின் கருத்து. பொதுவாக இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் டியூனையை மாற்றி வேறு படத்தில் பயன்படுத்துவார் என்று கூறப்படுகிறது.இவர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடலையும் மாற்றி தன் படத்தில் பயன்படுத்தியதாக இளையராஜா சகோதரர் கங்கை அமரன் தெரிவித்திருந்தார். இளையராஜாவின் பாடல்கள் இன்று வரையும் ரசிகர்கள் விரும்பி கேட்கும் பாடலாக உள்ளது. சோகமோ, சந்தோஷமோ எந்த சூழ்நிலையிலும் கேட்கும் பாடல்களை இளையராஜா கம்போஸ் செய்துள்ளார். அதாவது காலத்தால் அழியாத பாடல்களை கம்போஸ் செய்தவர் இளையராஜா. இவரது பிள்ளைகளான வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா ஆகியோரும் திரைத்துறையில் பிரபலமாக உள்ளனர்.இந்நிலையில், இளையராஜா நான் உங்களை எல்லாம் டார்ச்சர் பண்றேன் என்று உருக்கமாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ” நான் பேசுவது, திட்டுறது, கோவப்படுவது எல்லாத்தையும் நீங்கள் சகித்துக் கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா அது தான் என்னை டிஃபைன் பண்ணுகிறது. இது தெரிந்தாலும் என்னால் நிறுத்த முடியவில்லை. எனக்கு தெரிகிறது நான் உங்களை டார்ச்சர் செய்கிறேன். கோவப்படுகிறேன், ஒரு மாதிரி நடத்துறேன் எல்லாம் எனக்கு தெரிகிறது. ஆனால், என்னால் நிறுத்த முடியவில்லை. இயற்கையாகவே நான் அப்படிதான் இருக்கிறேன். என்னையை என்னால் சகித்துக் கொள்ளமுடியவில்லை என்பதுதான் இதற்கு அர்த்தம். விமர்சனங்களில் என்னுடைய தவறை சுட்டிக்காட்டினாலும் அதை திருத்தப்போவது இல்லை, திருத்த முடியாது. நடந்தவை நடந்தது தான். செய்த தவறை காலம் கடந்து போய் திருத்த முடியாது. அதனால் செய்தது செய்ததுதான். ஆரம்பக்காலத்தில் வேண்டும் என்றே தவறு செய்தது போன்ற விஷயங்கள் எல்லாம் வந்தது. அதனால் நான் பத்திரிகை படிப்பதையை விட்டுவிட்டேன்” என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version