பொழுதுபோக்கு
நாயகன் ரீ-ரிலீஸ்; மறைந்த ரோபோ சங்கருக்கு தான் முதல் டிக்கெட்: பிரபல திரையரங்கு உரிமையாளர் உருக்கம்!
நாயகன் ரீ-ரிலீஸ்; மறைந்த ரோபோ சங்கருக்கு தான் முதல் டிக்கெட்: பிரபல திரையரங்கு உரிமையாளர் உருக்கம்!
நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் வெளியான க்ளாகிச் திரைப்படம் நாயகன் ரீ-ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இநத ரீ-ரிலீஸ் கொண்டாட்டம் மறைந்த நடிகர் ரோபோ சங்கர் இல்லாமல் நிறைவு பெறாது என்று கூறி முதல் டிக்கெட்டை அவருக்காக ஒதுக்கியுள்ளதாக கமலா திரையரங்கின் உரிமையாளர் விஷ்ணு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் ரோபா சங்கர், தொடக்கத்தில் சிறுசிறு வேடங்களில் பல படங்களில் நடித்து வந்த இவர், அதன்பிறகு, காமெடி கேரக்டரில் நடிக்க தொடங்கினார். தனுஷூடன் மாரி, விஷ்ணு விஷாலுடன் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், அஜித்துடன் விஸ்வாசம் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள ரோபோ சங்கர் ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.அதேபோல் மாரி மற்றும் மாரி 2 ஆகிய படங்களில் நாயகன் தனுஷை விடவும், அதிகமாக ஸ்கோர் செய்தவர் ரோபோ சங்கர், அதற்கான சுதந்திரத்தை தனுஷ் கொடுத்திருந்தார். அதேபோல் வாய் மூடி பேசவும் திரைப்படத்தில், குடிகாரராக நடித்து அசத்திய ரோபோ சங்கர், கமல்ஹாசனின் தீவிர ரசிகராக தன்னை காட்டிக்கொண்டவர். பள்ளி மற்றும் கல்லூரி காலக்கட்டத்தில் கமல்ஹாசனின் பாடல்களுக்கு நடனமாடி பலரின் மனதை கவர்ந்துள்ளார். மேலும், தமிழ் சினிமாவில் தன்னை கமல்ஹாசனின் ரசிகர் என்று சொல்லி அவரது படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜூவுடன் போட்டிக்கு நின்றவர். கமல்ஹாசன் குறித்து யாருக்கு அதிக தகவல்கள் தெரிகிறது என்பது குறித்து ஒரு போட்டி வைத்துக்கொள்வோம் என்ற லோகேஷ் கனகராஜூவுக்கு வெளிப்படையாக சவால் விட்ட ரோபோ சங்கர், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார். அவரது மறைவு தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது கமலா திரையரங்கின் உரிமையாளர் விஷ்ணு வெளியிட்டுள்ள ஒரு பதிவு பலரின் மனதை உருக்கியுள்ளது. Bookings for Nayagan will open soon ! Celebrations at Kamala Cinemas for Kamal Sir’s films will not be the same without Robo Shankar uncle 💔Before public bookings open, the first ticket will be kept in memory of Robo Shankar uncle and the next few for his family. ❤️இந்த பதிவில், கமல்ஹாசனின் நாயகன் படத்திற்கான முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது. ஆனால் கமலா சினிமாஸில் ரோபோ சங்கர் இல்லாமல், கமல்ஹாசன் படங்களுக்கான கொண்டாட்டங்கள் நிறைவு பெறாது. இதனால் முன்பதிவு தொடங்கும் முன், முதல் டிக்கெட ரோபோ சங்கருக்காகவும், அடுத்த சில டிக்கெட்டுகள் அவரின் குடும்பத்தினர்களுக்காகவும் எடுத்து வைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.