பொழுதுபோக்கு
பாட்டு ரிப்பீட், ஃபைட் ரிப்பீட் ஓகே, ஒரு படத்தையே ரிப்பீட் பண்ண சொன்னா எப்படி? கேப்டன் ரசிகர்கள் தியேட்டரில் செய்த 90-ஸ் சம்பவம்!
பாட்டு ரிப்பீட், ஃபைட் ரிப்பீட் ஓகே, ஒரு படத்தையே ரிப்பீட் பண்ண சொன்னா எப்படி? கேப்டன் ரசிகர்கள் தியேட்டரில் செய்த 90-ஸ் சம்பவம்!
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து, அரசியலில் வெற்றிடத்தை விட்டு சென்றுள்ள கேப்டன் விஜயகாநத் நடித்த ஒரு படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்த ரசிகர்கள், படம் முடிந்து வெளியே செல்லாமல், டிக்கெட் எடுக்கிறோம் மீண்டும் படத்தை போடுங்க என்று கூறியுள்ளனர். அது என்ன படம் தெரியுமா? விஜயகாந்த் நடித்த அவரது 100-வது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் அந்த சாதனையை செய்த படம். கேப்டனின் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஆகஸ்ட் 22-ந் தேதி இந்த படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பெரிய வசூலை குவித்திருந்தது. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவருக்கு 100-வது படம் பெரிய வெற்றியை பெறுவது கடினமாக இருந்த காலக்கட்டத்தில், தனது 100-வது படத்தை பிரம்மாண்ட வெற்றிப்படமாக கொடுத்தவர் தான் விஜயகாந்த். கேப்டன் பிரபாகரன் படத்தில் அவருடன் இணைந்து சரத்குமார், மன்சூர் அலிகான், காந்திமதி, ரூபினி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த்து. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ஆட்டமா தேரோட்டமா, பாசமுள்ள பாண்டியரே ஆகிய இரு பாடல்கள் மூலம் பட்டிதொட்டி எங்கிலும் சிறப்பாக பிரபலமானவர் தான் ரம்யா கிருஷ்ணன். இந்த படம் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், மதுரையில் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே போகாமல் இருந்துள்ளனர். தியேட்டர் ஊழியர்கள் வந்து கேட்டபோது, திரும்பவும் டிக்கெட் எடுக்கிறோம் படத்தை போடுங்கள் என்று கூறியுள்ளனர். பாட்டு ரிப்பீட், ஃபைட் ரிப்பீட் கேள்விப்பட்டிருப்பீங்க, ஆனா இங்க ஒரு படமே ரிப்பீட் மோடில் சென்றது என்று படத்தின் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பல இடங்களில் இந்த மாதிரி சம்பவம் நடந்தது. அதேபோல் நிறைய தியேடடர்களில் ஆட்டமா தேரோட்டமா பாடலை மீண்டும் போட வேண்டும் என்று சொன்னார்கள். அதேபோல் படத்தில் விஜயகாந்த் இன்டரோ காட்சியில் வரும் அந்த போலீஸ் ஸ்டேஷன சண்டைக்காட்சியையும் திரும்ப போட வேண்டும் என்று சொன்னதாக கூறியுள்ளார்.