இலங்கை
பாதாள உலக கும்பலின் “சமபோஷ” கைது
பாதாள உலக கும்பலின் “சமபோஷ” கைது
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “சமபோஷ” என்று அழைக்கப்படும் மதுஷங்க என்பவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் “சமபோஷ” என்பவர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட “சமபோஷ” என்பவரிடமிருந்து 26 கிராம் 890 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
“சமபோஷ” என்பவர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “வெல்லே சாரங்க” என்பவரின் நெருங்கிய நண்பர் ஆவார்.
கைதுசெய்யப்பட்டவர் 5 கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.