சினிமா

பிரசவ வலியால் துடித்த ஜாய் .. குழந்தை பிறந்ததும் செய்த காரியம்? வேற லெவல் ஸ்டைல்

Published

on

பிரசவ வலியால் துடித்த ஜாய் .. குழந்தை பிறந்ததும் செய்த காரியம்? வேற லெவல் ஸ்டைல்

நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ்  இரண்டாவது  முறையாக ஜாய் கிறிஸில்டாவை திருமணம் செய்து கொண்டு சர்ச்சையில் சிக்கினார். தற்போது அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.  இதனால் மாதம்பட்டிக்கு எதிராக மேலும் சர்ச்சை கருத்துக்கள்  பதிவாகி வருகின்றன. மாதம்பட்டி ரங்கராஜ் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.  இவருக்கும்  ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிஸில்டாவுக்கு இடையே  உறவு தொடங்கியது முதல் தற்போது வரையில் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி வழக்கறிஞர் ஸ்ருதி ஆவர். எனினும், மாதம்பட்டி தனது முதல் மனைவியுடன் ஆறு மாதங்களாக தொடர்பின்றி காணப்பட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் ஜாயின்  வழக்கு விசாரணையின் போது மாதம்பட்டி தனது மனைவியை கையைப் பிடித்து அழைத்து வந்தார். மாதம்பட்டியின் எல்லா சர்ச்சை விஷயங்களுக்கும் அமைதியாக இருந்த அவருடைய முதல் மனைவி ஸ்ருதி, சமீபத்தில் தனது இன்ஸ்டா பதிவில், வெளியில் இருந்து வந்தவர்கள்  உங்களுடைய கணவரை  உங்களிடம் இருந்து பிரிக்க நினைத்தால் விட்டு விடாதீர்கள்..  நானும் எனது குழந்தையும் எவ்வளவு துன்பங்களை அனுபவிக்கின்றோம் என்று எங்களுக்குத் தான் தெரியும் என்று உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை தொடர்ந்து ஜாய் கிறிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர் பிரசவ வலியில் துடித்தது மற்றும் அவரை  மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றியது போன்றவை அவருக்கு பெண்ணின் சாபமாக அமையும் என  பிரபல ஜோதிடர் ஒருவரும் கூறி இருந்தார். இந்த நிலையில், ஜாய் கிறிஸில்டா தனது இன்ஸ்டா  பக்கத்தில் தனது மகனின் புகைப்படத்தையும் மாதம்பட்டியின் புகைப்படத்தையும் இணைத்து  தனது அப்பா போலவே பிறந்த குழந்தையும் ஸ்டைல் காட்டுவதாக  பதிவிட்டுள்ளார்.  தற்போது அவர் வெளியிட்ட   புகைப்படம் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version