இந்தியா

பூத் முகவர்களை கொண்டு வாக்காளர் திருத்தம்: புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ யோசனை மனு

Published

on

பூத் முகவர்களை கொண்டு வாக்காளர் திருத்தம்: புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ யோசனை மனு

நமது மக்கள் கழகம் தலைவரும், சுயேச்சை எம்.எல்.ஏ-வுமான நேரு (எ) குப்புசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் (SIR) பணியை 2026 சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் துவங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. அதனை முன்னிட்டு புதுச்சேரியில் இதற்கான பணி 04.11.2025 அன்று தொடங்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்னதாக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு தங்கள் தலைமையில் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தெரிகிறது. அதில் குறிப்பாக பூத் முகவர்களுக்கு எஸ்.ஐ.ஆர் சம்பந்தமான விபரங்களை தேர்தல்துறை சார்பாக விளக்கி கூறப்பட்டதாக தெரிகிறது. புதுச்சேரியில் சுயேட்சையாக போட்டியிட்டு என்னையும் சேர்த்து ஆறு பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். நாங்கள் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும்போது தேர்தல் துறையின் அனுமதியுடன் பூத்; முகவர்களை (Booth Agent) நியமித்து அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகளுடன் அவர்களை இணைத்து பணியாற்றி தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளோம். ஆனால் நாங்கள் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக அந்தந்த தொகுதிகளில் செயலாற்றி கொண்டிருக்கும் இந்த வேளையில் தற்போது நடக்கும் மேற்கண்ட எஸ்.ஐ.ஆர் சம்பந்தமான எந்த நிகழ்வுகளும் எங்களுக்கு தெரியப்படுத்தாமல் எங்களது தொகுதியில் மேற்கண்ட பணிகள் நடைபெற இருப்பது வருத்தமளிப்பதுடன் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. ஆகையால் தற்போது நடைபெறும் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் (SIR) பணியில் ஈடுபட ஏதுவாக சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் பூத்; முகவர்களை (Booth Agent) பயன்படுத்தி பொதுமக்களின் வாக்காளர் உரிமையை நிலைநாட்ட பின்வரும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.  1.    உருளையன்பேட்டை2.    முத்தியால்பேட்டை3.    உழவர்கரை4.    திருபுவனை5.    திருநள்ளார் (காரைக்கால்)6.    ஏனாம் (ஏனாம் பிராந்தியம்) செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version