இலங்கை

போதைப்பொருள் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாடு! ஓமல்பே தேரர்

Published

on

போதைப்பொருள் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாடு! ஓமல்பே தேரர்

நாடுபூராகவும் பரவியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி முக்கியமான வேலைத்திட்டத்தை எடுத்தள்ள நிலையில், அரசாங்கம் கஞ்சா வளர்ப்பதற்கு ஆறு நிறுவனங்களுக்கு 66 ஏக்கர் வழங்கியுள்ளதன் மூலம் போதைப்பொருள் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் இரட்டை நிலைப்பாடு இருந்துவருகிறது என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். 

 இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

Advertisement

 நாட்டில் எந்த தலைவரும் மேற்கொள்ளாத போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுத்துள்ளார். போதைப்பொருளை முற்றாக ஒழிப்பாக சுகாதாச விளையாட்டரங்கில் அவர் சத்தியமி்ட்டார்.

 உண்மையில அந்த தீர்மானம் மிகவும் முக்கியமாகும். நாட்டின் முன்னேற்றம், எதிர்கால சந்ததியினரின் எதிர்காலம் மற்றும் நாட்டின் அபிவிருத்தியை எதிர்பார்க்கும் அனைவரும் அதனை வரவேற்க வேண்டும்.

இது இவ்வாறு இருக்க, ஏற்றுமதிக்காக என தெரிவித்து, ஆறு நிறுவனங்களுக்கு கஞ்சா வளர்ப்பதற்கு 66 ஏக்கர் காணி வழங்கி இருக்கிறது. 

Advertisement

இது குழுவிக்கழுவி சேற்றில் போடும் வேலையாகும். கஞ்சா வளர்ப்பதற்கு அனுமதிப்பது முற்றாக அரசியலமைப்புக்கு முரணான செயலாகும்.

1929ஆம் ஆண்டு17ஆம் இலக்க நச்சு கட்டுப்பாட்டுச் சட்டம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது. 

அதன் பிரகாரம் கஞ்சா வளர்ப்பது, அருகில் வைத்திருப்பது, ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை செய்வது முற்றாக தடையாகும். இதற்கு மேலதிகமாக சுங்க ஆயுர்வேதம், ஆகாரம் போன்ற சட்டங்களிலும் கஞ்சாவை ஊக்குவிக்க முடியாது. கடந்த அரசாங்கம் வீழ்ச்சியடைய காரணமும் டயனாவின் கஞ்சா ஊக்குவிப்பு நடவடிக்கையாகும்.

Advertisement

 இது தூங்கிக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சியை எழுப்பிவிடும் யோசனையாகும். அதனால்,ஏற்றுமதிக்காக கஞ்சா வளர்ப்பதற்கு இடமளிமளிக்கும் வேலைத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு மகாநாயக்க தேரர்கள், சிவில் அமைப்பினராக நாங்கள் அரசாங்கத்துக்கு சொல்கிறோம்.

பாதால உலகம், போதைப்பொருள் ஒழிப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்லுங்கள். திருட்டுக்கு, ஊழல் மோசடிக்க எதிராக மக்கள் வீதிக்கிறங்கி, அதற்கு ஆதரவளித்த ஆட்சியாளர்களைை வீட்டுக்கு அனுப்பிய மக்கள் இருக்கும் நாடு இது. 

அதனால் நாட்டுக்கு பொருத்தமில்லாத தீர்மானம் எடுப்பது, அரசாங்கத்தின் இருப்புக்கும் தடையாக அமையக்கூடும்.

Advertisement

ஏற்றுமதி செய்யவதற்காக கஞ்சா வளர்ப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தால், அது தொடர்பில் தீர்மானம் எடுத்த ஆய்வு அறிக்கை என்ன? ஒருவேளை,அந்த நாடுகள் கஞ்சா கொள்வனவு செய்ய மறுத்துவிட்டால், அந்த கஞ்சா செடிகள் மீண்டு நாட்டுக்குள் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதனால் கஞ்சா வளர்ப்பதற்கு அனுமதியளிக்கும் செயலை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கேட்டுக்கொள்கிறேன்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version