இலங்கை

மட்டக்களப்பு. மருத்துவமனைக்கு சீன தூதரகத்தினால் கதிரைகள் வழங்கி வைப்பு!

Published

on

மட்டக்களப்பு. மருத்துவமனைக்கு சீன தூதரகத்தினால் கதிரைகள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு மருத்துவமனையின்  கோரிக்கையின் பேரில் சீனத் தூதரகத்திடமிருந்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினால் பெற்றுக் கொள்ளப்பட்ட 240 கதிரைகள்  நிர்வாகத்தினரிடம் நேற்றய தினம் திங்கட்கிழமை மாலை உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டன. 

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் சி.மாமாங்கராஜா தலைமையில் நடைபெற்ற குறித்த  நிகழ்வில் மட்டக்களப்பு மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவ அதிகாரி திருமதி க.கலாரஞ்சினி, மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள், மருத்துவமனை  நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டனர்.

Advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தின்  மாவட்ட சிவில் சமூக அமைப்பு பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் தமது கோரிக்கைக்கு இணங்க சீனத் தூதரகத்தின் ஊடாக இக்கதிரைகளைப் பெற்றுத்தந்த சிவில் அமைப்பிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், மருத்துவமனையில் நோயாளர்களின் நலன் கருதி, இன்னும் பல தேவைகள் உள்ளன. அவ்வாறான தேவைகளில் முன்னுரிமை அடிப்படையில் முடியுமானவற்றை நிவர்த்தி செய்து தருவதற்கு மாவட்ட சிவில் அமைப்பு முன்னிற்க வேண்டும் எனவும் இதன்போது மட்டக்களப்பு  மருத்துவமனையின்  பணிப்பாளர்  மருத்துவ அதிகாரி திருமதி க.கலாரஞ்சினி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version