இந்தியா
மாலத்தீவில் புகையிலைப் பொருட்களுக்கு தடை: தலைமுறை சார்ந்த புகைப்பிடிப்பதர்கு தடை விதித்த உலகின் முதல் நாடு!
மாலத்தீவில் புகையிலைப் பொருட்களுக்கு தடை: தலைமுறை சார்ந்த புகைப்பிடிப்பதர்கு தடை விதித்த உலகின் முதல் நாடு!
Maldives generational smoking ban: உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தரவுகளின்படி, புகைபிடித்தல் உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 7 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளுக்குக் காரணமாகிறது.ஆங்கிலத்தில் படிக்க:மாலத்தீவின் தலைமுறை சார்ந்த புகைப்பழக்கத் தடை என்ன?மாலத்தீவு, தலைமுறை சார்ந்த (generational) புகைப் பிடித்தலுக்கு தடை விதித்த உலகின் முதல் நாடாக மாறியுள்ளது. இதன் மூலம் ஜனவரி 2007-ம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்த நபர்கள் எந்த வடிவத்திலும் புகையிலையை வாங்குவதற்கோ, பயன்படுத்துவதற்கோ அல்லது விற்பதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.மாலத்தீவு சுகாதார அமைச்சகம் இந்த நடவடிக்கையை “பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், புகையிலை இல்லாத தலைமுறையை மேம்படுத்துவதற்கும் தேசத்தின் முயற்சிகளில் ஒரு வரலாற்று மைல்கல்” என்று அழைத்தது.ஜனவரி 2007-ல் அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் எந்த வடிவத்திலும் புகையிலையை வாங்குவது, பயன்படுத்துவது அல்லது விற்பது மீதான இந்தத் தடை, அதிபர் முகமது முய்சு-வால் (Mohamed Muizzu) அங்கீகரிக்கப்பட்ட புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் இரண்டாவது திருத்தம் மூலம் இயற்றப்பட்டது.இந்தத் தென் ஆசியத் தீவு தேசம், வயது வித்தியாசமின்றி அனைத்து தனிநபர்களுக்கும் பொருந்தும் வகையில், மின்னணு சிகரெட்டுகள் மற்றும் வேப்பிங் தயாரிப்புகளின் இறக்குமதி, விற்பனை, விநியோகம், வைத்திருத்தல் மற்றும் பயன்பாட்டிற்கு விரிவான தடையையும் பராமரிக்கிறது.உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தரவுகளின்படி, புகைபிடித்தல் உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 7 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளுக்குக் காரணமாகிறது.உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி, 2024-ம் ஆண்டில், மாலத்தீவு மக்கள் தொகையில் 15 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 25.5 சதவீதம் பேர் புகையிலையைப் பயன்படுத்துபவர்களாக இருந்தனர். இதில் ஆண்களின் பங்கு 41.7 சதவீதமாகவும், பெண்களின் பங்கு 9.3 சதவீதமாகவும் இருந்தது.2021-ம் ஆண்டின் தரவுகளை மதிப்பிட்ட சி.என்.என் (CNN) செய்தி நிறுவனத்தின்படி, 13 முதல் 15 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினரிடையே புகையிலை பயன்பாட்டு விகிதம் கிட்டத்தட்ட இரட்டிப்பாக இருந்தது.“புகையிலையின் மீதான தலைமுறை சார்ந்த தடை, இளம் மக்களை புகையிலையின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் வலுவான உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. இது உலக சுகாதார அமைப்பின் புகையிலைக் கட்டுப்பாட்டிற்கான கட்டமைப்பு மாநாட்டின் (WHO FCTC) கீழ் மாலத்தீவின் கடமைகளுடன் ஒத்துப்போகிறது” என்று மாலத்தீவு சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது முதல் முயற்சி அல்லஇதுபோன்ற பல நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன, ஆனால் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவற்றில் மிகவும் பிரபலமானது, 2009-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலை விற்பதைத் தடைசெய்யும் நியூசிலாந்து சட்டம். இது 2024-ல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் வரிச் சலுகைகளுக்கு நிதியளிக்க உதவும் வகையில் ஒரு வருடத்திற்கு முன்பே அது திரும்பப் பெறப்பட்டது.இங்கிலாந்திலும் இதுபோன்ற சட்ட முன்மொழிவுகள் தாக்கல் செய்யப்பட்டன, ஆனால் அவை ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை. 2009-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலையைத் தடைசெய்யும் மற்றும் புகையிலை மற்றும் வேப்பிங் தயாரிப்புகளின் விற்பனை குறித்த விதிமுறைகளை மேம்படுத்தும் புதிய சட்டத்தின் ஒரு பதிப்பு தற்போது பாராளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது.