பொழுதுபோக்கு

முடியல பிக்பாஸ்… பார்வதி, திவாகரை விட்டா வேறு ஆளே இல்லையா? குமுறும் நெட்டிசன்கள்

Published

on

முடியல பிக்பாஸ்… பார்வதி, திவாகரை விட்டா வேறு ஆளே இல்லையா? குமுறும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி 29 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே 20 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது வைல்டு கார்டு எண்ட்ரி என்று நான்கு போட்டியாளர்களை உள்ளே அனுப்பியுள்ளனர். ஆரம்பம் முதல் பிரச்சனை… பிரச்சனை.. பிரச்சனை என்ற நிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை இருப்பது பெரிய விஷயம் அல்ல இருந்தாலும் இந்த சீசன் ரொம்ப வொர்ஸ்ட்டு பா என்று மக்கள் விமர்சிக்கும் அளவிற்கு சீசன் 9 உள்ளது.இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக கருதப்படுவதே பார்வதியும், திவாகரும் தான் இவர்கள் இல்லாமல் இதுவரை ஒரு ப்ரொமோ கூட வெளியானது இல்லை. ப்ரொமோ கன்டண்ட் கொடுப்பதற்காகவே இவர்கள் பிரச்சனை செய்வார்கள் போல. சரி வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்தால் ப்ரொமோ கன்டன்ட் மாறும் என்று பார்த்தல் அதுவும் இல்லை. அவர்களையும் பார்வதி, திவாகர் விமர்சிக்கிறார்கள்.பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நாளே திவ்யா கணேஷ் வீட்டில் தலையாகிவிட்டார். இவர் வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை குறைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு விஷயங்களும் செய்து வருகிறார். முதல் நாள் பிக்பாஸ் குழுக்கள் பிரிக்கும் போதே திவ்யாவிற்கு பார்வதிக்கும் முட்டிக் கொண்டது. இந்த பார்வதி இப்படி தான் போல என்ன சொன்னாலும் கேட்கமாட்டங்க என்ற மனநிலை தொடர்ந்து மக்களுக்கு இருந்து வருகிறது.மேலும், திவாகரும் திவ்யாவை பற்றி விமர்சித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் என்னப்பா இவங்கள எல்லாம் பெரிய ஆளாக்கிவிட்டுட்டு இருக்காங்க. தர்பீஸ் ஏற்கனவே நான் நின்னா அழகு, நடந்தா அழகு, நடிப்பு அரக்கன் என்று தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார். இப்போது தான் இல்லாமல் ப்ரொமோவே வரவில்லை என்று தெரிந்தால் அவ்வளவு தான் கையில பிடிக்கவே முடியாது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.இன்னும் பலர் வாட்டர் மெலன் திவாகர் பாவம் என்று நினைத்தோம். ஆனால் அவரு வெவரமான ஆள் தான் தன்னை காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ. அத செஞ்சிட்டு இருக்காரு. அவரும் பார்வதி மாதிரி விஷம் தான். பிக் பாஸ் வீட்டில் தான் இல்லை தான் தான் பிக் பாஸே என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். திவாகர். திவ்யா தன்னை கதறவிட்டதை தாங்க முடியாமல் உளறுகிறார் என தெரிவித்துள்ளனர். இப்படி பார்வதி – திவாகரால் கடுப்பான மக்கள், விஜய் சேதுபதியை இது என்ன நியாயம் என்று நீங்களே கேளுங்க என்று குமுறி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version