பொழுதுபோக்கு

மும்பையில் ரூ. 45 கோடி வீடு, ரூ. 4 கோடிக்கு சொகுசு கார்; ஒரு விளம்பரம் நடிக்க ரூ. 40 லட்சம் வாங்கும் இந்த நடிகை யார் தெரியுமா?

Published

on

மும்பையில் ரூ. 45 கோடி வீடு, ரூ. 4 கோடிக்கு சொகுசு கார்; ஒரு விளம்பரம் நடிக்க ரூ. 40 லட்சம் வாங்கும் இந்த நடிகை யார் தெரியுமா?

பான் இந்தியா நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டேவிற்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம் இருக்கிறது. தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் பூஜா ஹெக்டே. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். நடிகை பூஜா ஹெக்டே ‘மிஸ் யூனிவர்ஸ் இந்தியா’ அழகு போட்டியில் பங்கேற்ற கையோடு திரைத்துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டார். இவர் 2012-ஆம் ஆண்டு இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம். தொடர்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டு இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’  திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து கவனம் பெற்றார்.இதையடுத்து நடிகை பூஜா ஹெக்டே, விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 4’, தனுஷ் நடிக்கும் புதிய படத்திலும் கமிட்டாகி உள்ளார். பூஜா ஹெக்டே, ரஜினி நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படத்தில் ‘மோனிகா’ பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் அவரை மேலும் பிரபலமடைய செய்தது.இப்படி பல மொழிகளில் நடிப்பில் கலக்கி வரும் பூஜா ஹெக்டே தொழிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இவரது மாத வருமானம் மட்டும் ரூ. 50 லட்சம் என்று கூறப்படுகிறது. மும்பையில் 4 ஆயிரம் சதுர அடியில் ரூ. 45 கோடி மதிப்புள்ள பங்களாவையும் வைத்துள்ளார். மேலும், மும்பை பந்த்ரா பகுதியில் ரூ. 6 கோடி மதிப்புள்ள அபார்ட்மென்ட், ஹைதராபாத்தில் ரூ. 4 கோடி மதிப்புள்ள வீடு என எல்லா இடத்திலும் தனக்கான வீட்டை வாங்கி போட்டுள்ளார்.பூஜா ஹெக்டேவிடம் ரூ. 4 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் கார், ரூ. 80 லட்சம் மதிப்புள்ள ஆடி கார் இருக்கிறது. ரூ. 2 கோடி மதிப்புள்ள பாஷ் கயேன், ரூ. 60 லட்சம் மதிப்புள்ள ஜாகுவார் கார்களும் வைத்திருக்கிறார் பூஜா ஹெக்டே. விளம்பரத்தி நடிக்க ரூ. 40 லட்சம் கேட்கிறாராம். 13 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டேவை 27.6 மில்லியன் பேர்  இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து வருகிறார்கள். தற்போது இவர் இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version