இலங்கை

யாழில் பொலிஸார் அதிரடியில் சிக்கிய பலர்!

Published

on

யாழில் பொலிஸார் அதிரடியில் சிக்கிய பலர்!

   யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு பேரை கைது செய்து , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

Advertisement

அதன் போது குறித்த ஆறு பேரில் ஒருவர் யாழ்ப்பாண நகர் பகுதியில் இடம்பெற்ற வழிப்பறி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பதனை கண்டறிந்த பொலிஸார், அது தொடர்பில் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளின் போது கொள்ளையடிக்கப்பட்ட சங்கிலி , மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள் என்பவற்றை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை யாழில் கொள்ளை சம்பவங்கள் குற்றசெயல்கள் அதிகரித்துவரும் நிலையில் கொள்ளையர்களில் கொட்டத்தை அடக்க பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version