இலங்கை

ரணில் விக்ரமசிங்கவின் சிரேஸ்ட ஆலோசகர் அதிரடியாக கைது!

Published

on

ரணில் விக்ரமசிங்கவின் சிரேஸ்ட ஆலோசகர் அதிரடியாக கைது!

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே, நிதி முறைகேடு தொடர்பில்  இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த  2015 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் சரித ரத்வத்தே ஒரு சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டில் நிலையான கொள்முதல் நடைமுறைகளை மீறி 50 தற்காலிக கிடங்குகளை வாங்கியது தொடர்பான விசாரணை தொடர்பாக குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

இந்த தற்காலிக கிடங்கு இலங்கை அரசு வர்த்தக கூட்டுத்தாபனத்தின் மூலம் ரூ.90 மில்லியனுக்கும் அதிகமான செலவில் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version