சினிமா
ரூ. 45 கோடியில் மும்பையில் பங்களா..மாதம் ரூ. 40 லட்சம் சம்பளம்!! யார் இந்த நடிகை..
ரூ. 45 கோடியில் மும்பையில் பங்களா..மாதம் ரூ. 40 லட்சம் சம்பளம்!! யார் இந்த நடிகை..
முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 4 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பூஜா ஹெக்டேவின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இட்லி கடை எனும் ஹிட் படத்தை கொடுத்த நடிகர் தனுஷுடன் தான் பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.இந்நிலையில், மோனிகா அட்லீ, அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் AA22xA படத்தின் ஒரு பாடலுக்கு கமிட்டாகி அதற்காக ரூ. 5 கோடி சம்பளமும் வாங்கவிருக்கிறாராம். அதேபோல் நடிப்பை தாண்டி பிற தொழிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது மாத வருமானம் மட்டுமே ரூ. 50 லட்சம் என்று கூறப்படுகிறது.மும்பையில் 4 ஆயிரம் சதுர அடியில் ரூ. 45 கோடி மதிப்புள்ள பங்களாவை வாங்கியிருக்கிறார். மேலும் மும்பை பந்த்ரா பகுதியில் ரூ. 6 கோடி மதிப்பிலான அபார்ட்மெண்ட்டும், ஹைதராபாத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான வீட்டை வாங்கியும் இருக்கிறார். ரூ. 4 கோடியில் ரேஞ்ச் ரோவர் கார், ரூ. 80 லட்சட்த்ஹில் ஆடி கார், ரூ. 2 கோடியில் பாஷ் கயேன் கார், ரூ. 60 லட்சத்தில் ஜாகுவார் கார்களையும் வைத்திருக்கிறார்.