இலங்கை

விமான நிலையத்தில் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Published

on

விமான நிலையத்தில் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 21 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் அதிரடியாக  கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக நாட்டுக்கு வருகை தந்துள்ளார். அவரது பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டு  இந்தப் போதைப்பொருள் தொகை நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்போது பறிமுதல் செய்யப்பட்ட குஷ் போதைப்பொருள் தொகை 2.7 கிலோ கிராம் நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் 28 வயதான இளைஞன்  என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version