இலங்கை
யாழில் குடும்பஸ்தரின் விபரீத முடிவால் பிரிந்த உயிர் ; கதறும் உறவுகள்
யாழில் குடும்பஸ்தரின் விபரீத முடிவால் பிரிந்த உயிர் ; கதறும் உறவுகள்
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று (3) உயிர்மாய்த்துள்ளார்.
உடுவில், மல்வம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவார்.
இந்த நபர் இதற்கு முன்னரும் ஒரு தடவை உயிர்மாய்க்க முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்த விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.