பொழுதுபோக்கு
அதபத்தி மட்டும் பேசாதீங்க: டென்ஷனான திவாகர், இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்; சவால் விட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்
அதபத்தி மட்டும் பேசாதீங்க: டென்ஷனான திவாகர், இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்; சவால் விட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிப்பராகி வருகிறது. முந்தைய சீசன்களில் திரைப்பிரபலங்கள் மட்டும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதன்பின்னர் திரைப்பிரபலங்களுடன் சமூக வலைதள பிரபலங்களும் பங்கெடுத்தனர். தற்போது பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் முழுவதும் சமூக வலைதள பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியாளர்கள் பட்டியல் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வந்தனர்.பிக்பாஸ் வீடு என்றாலே போட்டிகளும், பிரச்சனைகளும் இருக்கத் தான் செய்யும். ஆனால், தற்போதைய சீசனில் மக்களே ‘அட நிறுத்துங்கடா’ என்று சொல்லும் அளவிற்கு பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்தன. ஒவ்வொரு நாளும் பிரச்சனை என்றே பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தது. இது பார்ப்பவர்களையும் வெறுப்படைய செய்தது. மேலும், வழக்கத்திற்கு மாறாக பிக்பாஸ் ரேட்டிங்கும் கீழே சென்றதாக தகவல் வெளியானது.பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா சி.ஜே., ஆதிரை, கலையரசன் ஆகியோர் ஒவ்வொரு வாரமாக வெளியேறியுள்ளனர். களையிழந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கும் விதமாக வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே இறக்கியுள்ளது பிக்பாஸ். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளர்கள் 50 அல்லது 60 நாட்களுக்கு மேல் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள். ஆனால், தற்போது உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் எல்லாம் வொர்த் இல்லை என்று தெரிந்த பிக்பாஸ் 30 நாட்களுக்கு முன்பே வைல்டு கார்டு போட்டியாளர்களை களத்தில் இறக்கியிருப்பதாக கூறப்படுகிறது.பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்த பிரஜின், சாண்ட்ரா, அமித், திவ்யா கணேஷ் ஆகியோர் போட்டியாளர்களை நல்லா வாங்கு வாங்கு என்று வாங்கினர். இதையடுத்து வீட்டு தலையான திவ்யாவிற்கும் பார்வதிக்கும் மோதல் வெடித்து வருகிறது. இதையடுத்து, நேற்று பிக்பாஸ் வீட்டில் பெரும் பிரளயமே வடித்தது. பிராங் செய்கிறேன் என்று பிரவீனும் கம்ருதீனும் அடித்துக் கொண்டனர். இதனால் பயந்த சாண்ட்ரா அழுது புலம்பினார். அதன்பின்னர், திவாகர் சரியாக மைக் மாட்டவில்லை என்று பிக்பாஸ் அறிவுறுத்தினார். இதை வீட்டு தலை திவ்யா சொல்லிக் கொண்டிருந்த போது பார்வதி தேவையில்லாமல் திவ்யாவை வம்பிழுத்தார்.ஹோட்டல் டாஸ்கிற்காக பிரியங்கா, தீபக், மயூரி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் கெஸ்டாக வந்துள்ளனர். இவர்களிடமே பார்வதி தன் வேலையை காண்பித்துவிட்டார். இதையடுத்து, பிரியங்கா ‘திருந்தாத ஜென்மம்’ பாட்டு தெரியுமா என்று பார்வதியை கலாய்த்தார். பார்வதியும் தனக்கு என்ன என்பது போல் சுற்றிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பொருத்துக் கொள்ள முடியாத போட்டியாளர்கள் கெஸ்டாக வந்தவர்களிடம் பார்வதி குறித்து புலம்பி தள்ளிவிட்டனர். இதன்பிறகு கெஸ்டாக வந்திருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.