இலங்கை

இலங்கையை உலுக்கிய சம்பவம் ; நீரில் மூழ்கி பலியானோரின் அதிகரிப்பு

Published

on

இலங்கையை உலுக்கிய சம்பவம் ; நீரில் மூழ்கி பலியானோரின் அதிகரிப்பு

uptate- தெதுரு ஓயா சம்பவத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.  உயிருடன்  மீட்கப்பட்டவரும் தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

Advertisement

10 பேர் கொண்ட குழுவொன்று கிரிபத்கொடையில் இருந்து சிலாபத்திற்கு இன்று (5) சுற்றுலா சென்றுள்ளனர்.

அவர்கள் சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போனவர்களில் ஒருவர் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் அவர் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இதனை அடுத்து காணாமல் போன ஏனையவர்களை தேடும் நடவடிகையில் பொலிஸார், பொலிஸ் உயிர் காப்பு பிரிவினர், கடற்படையினர் மற்றும் பிரதேச மக்களும் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன நால்வரும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version