இலங்கை

உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதி சுகாதார அமைச்சர் இடையே சந்திப்பு!

Published

on

உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதி சுகாதார அமைச்சர் இடையே சந்திப்பு!

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் மற்றும் இயக்குநருமான பிலிப் வார்டு மற்றும் அரசாங்க நட்புறவு அதிகாரி முஸ்தபா நிஹ்மத் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (04) சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவை சந்தித்து கலந்துரையாடினர். 

 2023-2027 ஆம் ஆண்டிற்கான உலக உணவுத் திட்டத்தின் (WFP) பிரதான திட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் எதிர்கால வேலைத் திட்டத்தின் அடிப்படையில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

Advertisement

 தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கும், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்கும், அதன் மூலம் சரியான ஊட்டச்சத்துடன் ஆரோக்கியமான குடிமக்களை உருவாக்குவதற்கும் உலக உணவுத் திட்டம் தொடர்ந்து தனது பங்களி ப்பை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுக்கு சரியான சந்தையை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல், ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைத்தல் ஆகியவற்றுக்கான தேசிய முயற்சிகளுக்கு ஆதரவாக, உலக உணவுத் திட்டத்தை (WFP) (2023-2027) செயல்படுத்துவதில் தலைமை தாங்கியதற்காக, உலக உணவுத் திட்டத்தின் (WFP) இலங்கைக்கான பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட பிலிப் வார்டுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ நன்றி தெரிவித்தார். 

 பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வருவதால், உணவு அமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவர் அளித்த பங்களிப்பிற்காகவும் அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

Advertisement

1968 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயல்பட்டு வரும் உலக உணவுத் திட்டம், பொருளாதார மற்றும் காலநிலை சவால்களை எதிர்கொள்ளும் இலங்கை மக்களின் உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

 உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப் வார்ட், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து உலக உணவுத் திட்டத்தின் பணிகளைத் தொடர தேவையான ஆதரவை வழங்கியதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் சுகாதார அமைச்சருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். 

 சுகாதார துணை அமைச்சர் வைத்தியர் ஹன்சகா விஜேமுனி மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version