சினிமா
என் உடல்நிலை சரியில்லை..உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்? சீரியல் நடிகை அதிர்ச்சி வீடியோ..
என் உடல்நிலை சரியில்லை..உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்? சீரியல் நடிகை அதிர்ச்சி வீடியோ..
தமிழில் 143, காதல் வைத்து காத்திருந்தேன் போன்ற வெப் தொடர்களிலும் விஜய் டிவியின் முக்கிய சிரீயல்களான முத்தழகு, தங்கமகள், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்தவர் தான் நடிகை சாய் ரிச்சி.சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து உருக்கமாக பேசியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.அந்த வீடியோவில், நீங்கள் தொடர்ந்து என் இன்ஸ்டாகிராமை பார்த்து இருப்பீர்கள், உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும், என் உடல்நிலை இப்போது சரியில்லை. இது எப்போது சரியாகும் என்று எனக்கு தெரியாது, யாருக்கு என்ன சொல்வது என்றும் தெரியவில்லை.எனக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். சோசியல் மீடியாவில் இப்படி பேசுவது சரியா? தவறா? என்று எனக்கு தெரியவில்லை.கடவுளிடம் அது வேண்டும், இது வேண்டும் வாழ்கையில் எல்லாம் வேண்டும் என கேட்கிறோம், இது எல்லாத்தையும் அனுபவிக்க நல்ல வாழ்க்கை வேண்டும் நல்ல உடல் நலம் வேண்டும் நீங்கள் நன்றாக இருந்தால் தான் அனைத்தையும் அனுபவிக்க முடியும் என்று கூறியதோடு, நான் விரைவில் குணமடைவேன் என நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.அவருக்கு என்ன ஆனது அவர் உடல்நிலைக்கு என்ன காரணம் என்று கூறாமல் இருப்பதை பார்த்து பலரும் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்தும் ஆறுதல் கொடுத்தும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.