பொழுதுபோக்கு

எம்.ஆர்.ராதா சுட்டது எம்.ஜி.ஆரை தான்; ஆனா குறி வச்சது இந்த காமெடி நடிகருக்கு; அவர் யார் தெரியுமா?

Published

on

எம்.ஆர்.ராதா சுட்டது எம்.ஜி.ஆரை தான்; ஆனா குறி வச்சது இந்த காமெடி நடிகருக்கு; அவர் யார் தெரியுமா?

திரையுலகில் மிகவும் பிரபலமாக நடிகராக வலம் வந்தவர் எம்.ஆர்.ராதா. இவருடைய வசனங்கள் இன்றும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. ‘ரத்தக் கண்ணீர்’  படத்தில் எம்.ஆர்.ராதா பேசிய வசனங்கள் அனைத்தும் இன்றும் மக்களை வியப்பில் ஆழ்த்தும். இப்படி தன் திறமையால் உயர்ந்த எம்.ஆர்.ராதா கடந்த 1967-ம் ஆண்டு அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் எம்.ஜி.ஆரை சுட்டுக் கொண்டு தானும் சுட்டுக் கொண்டார்.இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர் பிழைத்து இவரும் வீடு திரும்பினர். இதையடுத்து எம்.ஜி.ஆர் தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் எம்.ஆர்.ராதாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து எம்.ஆர்.ராதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்கு தண்டனை ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்ட நிலையில் எம்.ஆர்.ராதா 4 ஆண்டுகள் 4 மாதங்களில் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்.இந்நிலையில், எம்.ஆர்.ராதா யாரை சுடுவதற்காக துப்பாக்கி பயிற்சி எடுத்தார் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.  இழந்த காதல் என்ற நாடகத்தில் ஜெகதீஷ் என்ற கதாபாத்திரத்தில் எம்.ஆர்.ராதா நடிக்கிறார். அவருடைய நடிப்பிற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்களாம். அந்த நாடகத்தை படமாக்க வேண்டும் என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முடிவெடுக்கிறார். அதன்பின்னர், நாடகத்தின் உரிமையாளரிடம் இந்த வேடத்தில் இனிமேல் எம்.ஆர்.ராதாவை நடிக்க வைக்க வேண்டாம் வேறு சிலரை நடிக்க வையுங்கள் என்று கலைவாணர் கூறியுள்ளார். அதன்பிறகு அந்த வேடத்தில் டி.எஸ்.பாலையா நடித்துள்ளார்.இன்னும் சிலர் நடித்திருக்கிறார்கள், ஆனால் யார் நடித்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கரூரில் நாடகம் நடந்து முடிந்த நிலையில் எம்.ஆர்.ராதா துப்பாக்கி பயிற்சி எடுக்க ஆரம்பிக்கிறார். இதை எம்.ஆர்.ராதாவே பதிவு செய்துள்ளார். அந்த நாடகத்தின் அதிபர் ஜெகநாத ஐயர், என்.எஸ். கிருஷ்ணனை பார்த்து நீங்கள் கரூர் பக்கம் வந்துவிடாதீர்கள். உங்களை சுட வேண்டும் என்று எம்.ஆர்.ராதா துப்பாக்கி பயிற்சி எடுப்பதாக தெரிவித்துள்ளார்.A post shared by மாண்புமிகு மக்கள் (@tamilpeople_offl)ஒருநாள் எம்.ஆர்.ராதா அறையில் அமர்ந்திருந்த போது திடீரென கதவை திறந்து கொண்டு வந்த என்.எஸ்.கிருஷ்ணன், என்னை சுடுவதற்காக துப்பாக்கி பயிற்சி எடுத்துக் கொள்கிறாயாம், இப்போது நேரிலே வந்துள்ளேன் சுடு என்னை என்று எம்.ஆர்.ராதாவிடம் கூறியுள்ளார். அந்த இடத்தில் என்.எஸ்.கிருஷ்ணனை எதிர்பார்க்காத எம்.ஆர்.ராதா பதறிப்போய்விட்டாராம். அவரை பார்த்து என்.எஸ்.கிருஷ்ணன் சொன்னாராம் நான் எடுக்கப்போகும் படத்தில் உனக்கு வேஷம் தரமாட்டேன் என்று தானே நினைத்தாய்.என்னிடம் ஏராளமான பங்களாக்கள் இருக்கின்றன, கார்கள் இருக்கின்றன. சினிமா உலகில் எல்லோரிடமும் எல்லாம் இருக்கிறது. ஆனால், உன்னிடம் இருப்பது போன்ற நடிப்பு உன்னை தவிர வேறு யாரிடமும் திரையுலகில் இல்லை. உன்னை எப்படி என்னால் வேலை வாங்க முடியும். உன்னை வேலை வாங்க கூடாது என்று தான் அந்த பாத்திரத்தில் நீ நடிக்க வேண்டாம் என்று நினைத்தேன். ஒரு நண்பன் கையால் சுடப்பட்டு சாவதை தவிர வேற இன்பம் எதுவும் இல்லை என்று மார்பை காட்டிக் கொண்டு நின்றுள்ளார். இதை பார்த்த எம்.ஆர்.ராதா துப்பாக்கியை கீழே போட்டு அவரை கட்டிப்பிடித்து அழுத்துள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version