சினிமா
ஒரு நாளைக்கு ரோல் ரிவர்சஸ்.. ஆம்பளையாக மாறிய வரலட்சுமி.! என்ன காரியம்னு வீடியோ பாருங்க
ஒரு நாளைக்கு ரோல் ரிவர்சஸ்.. ஆம்பளையாக மாறிய வரலட்சுமி.! என்ன காரியம்னு வீடியோ பாருங்க
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழும் வரலட்சுமி தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார். இவர் தனது சகோதரி பூஜா சரத்குமார் உடன் இணைந்து தோசா டைரிஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சரஸ்வதி என்ற படத்தையும் இயக்க உள்ளார் .சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர் தான் வரலட்சுமி. இவர் தனது தனித்துவமான நடிப்பினால் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலேயே தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இவர் பிரபல தொழிலதிபர் நிக்கோலஸ் சத்தேவ் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் இவர் இரண்டாவதாக நிக்கோலஸை திருமணம் செய்தார். இதற்கு பல விவாதங்களும் எழுந்தன. ஆனால் தற்போது வரையில் அவர்கள் இருவரும் திருமண வாழ்க்கையில் ஒற்றுமையாகவே காணப்படுகின்றனர். திருமணத்திற்கு பிறகும் வரலட்சுமி படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.வரலட்சுமி நடிக்கும் படங்களுக்கே மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில் தற்போது அவர் தயாரிக்கும் படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு வந்துள்ளது. இந்த நிலையில், நாளுக்கு நாள் பெண்கள் மீதான வன்கொடுமை அதிகரித்து வருவதை தொடர்ந்து ஆண்களை கண்டிக்கும் விதமாக வித்தியாசமான முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளார் வரலட்சுமி. அதாவது பெண்கள் ஆண்களைப் போல் மாறினால் என்ன நடக்கும் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீல்ஸ் மூலம் நடித்து காட்டியுள்ளார். தற்போது அவருடைய வீடியோ வைரல் ஆகி வருகிறது.