இலங்கை
கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; தலை தெறிக்க ஓடிய நபர்கள்
கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; தலை தெறிக்க ஓடிய நபர்கள்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், பீப்பாய்கள் என்பன இன்றைய தினம் (05) கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிசார் தேவிபுரம் பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொண்டனர்.
இதன்போது, கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11 இலட்சத்து 69 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பீப்பாய்கள் என்பன புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சந்தேக நபர்களை தேடி மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.