இலங்கை
களுத்துறை கடற்கரையில் மீட்கப்பட்ட பொதியில் ஆபத்தான பொருள்!
களுத்துறை கடற்கரையில் மீட்கப்பட்ட பொதியில் ஆபத்தான பொருள்!
களுத்துறை, கட்டுக்குறுந்த கடற்கரையில் இன்று (05) காலை பொதியொன்று மீட்கப்பட்ட நிலையில், அதில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொதியில் சுமார் 12 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்துள்ளதுடன் அதன் பெறுமதி 3 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடற்கரையில் கரையொதுங்கிய இந்தப் பொதியை அருகிலுள்ள சுற்றுலா விடுதி ஊழியர்கள் கண்டதுடன் இதுதொடர்பில் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பொதியை மேலதிக விசாரணைகளுக்காக எடுத்துச்சென்ற நிலையிலேயே போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை களுத்துறை கட்டுக்குறுந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.