பொழுதுபோக்கு
கேப்டன் படத்தில் நான் செய்த தப்பு, இப்போவும் வருத்தமா இருக்கு; இயக்குநர் விக்ரமன் ஓபன் டாக்!
கேப்டன் படத்தில் நான் செய்த தப்பு, இப்போவும் வருத்தமா இருக்கு; இயக்குநர் விக்ரமன் ஓபன் டாக்!
தமிழ் திரையுலகில் ‘கேப்டன்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய்காந்த் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றிப் பெற்றுள்ளன. சில திரைப்படங்கள் இன்று வரையிலும் மக்களால் ரசித்து பார்க்கப்படுகிறது. அப்படி குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது தான் ‘வானத்தைப் போல’ திரைப்படம். கடந்த 2000-ஆம் ஆண்டு இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜயகாந்த், அப்பா – மகன் என்ற இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘வானத்தை போல’ திரைப்படத்தில் தான் செய்த தவறு குறித்து இன்றும் வருந்துவதாக நேர்காணல் ஒன்றில் இயக்குநர் விக்ரம் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, ”வானத்தை போல படத்தில் மீனா மற்றும் அவரது நண்பர்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள். அப்போது விஜயகாந்த் வேலை முடிந்துவிட்டது என்று செல்லும் போது மீனாவின் நண்பர் ஆனந்த், விஜயகாந்தை அழைத்து கீழே இருக்கும் மண்ணை எடுத்துக் கொடுத்து எண்ண செல்வார். இதனால் கோபமடையும் விஜயகாந்த் 1,022,47 மண் இருக்கு; நான் எண்ணிவிட்டேன் சந்தேகம் என்றால் நீங்கள் எண்ணிக் கொள்ளுங்கள் என்பார்.அந்த டயலாக் ரொம்ப மாஸாக இருந்தது. அதன்பிறகு, மீனாவிற்கு பிறந்தநாள் பரிசாக வளையலை கொடுக்கும் பொழுது அவமானப்பட்டு விஜயகாந்த் வருவார். அப்போது ஆனந்த், என்ன சமையல் இப்ப எப்படி இருக்கு என்று விஜயகாந்தை பார்த்து கேட்பார். அப்போது விஜயகாந்த், ஆனந்தின் கன்னத்தில் அடித்துவிட்டு இப்போது உனக்கு எப்படி இருந்தது, அப்படிதான் எனக்கும் இருந்தது என்று டயலாக் வைத்திருக்கலாமோ என்று இந்த படத்தின் டப்பிங்கின் போது தோன்றியது. எனக்கு ரீ ஷூட் செய்து பழக்கம் இல்லை என்பதால் நான் அதை அப்படியே விட்டுவிட்டேன். இன்று வரைக்கும் அந்த மாஸ் காட்சியை பண்ணவில்லையை என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்றார்.தமிழ் சினிமாவில் பல ஃபீல் குட் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குநர் விக்ரமன். 1990-ம் ஆண்டு வெளியான புது வசந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே 2 தமிழக அரசின் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த படத்திற்கான விருதை பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து, பெரும்புள்ளி கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக, சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வனத்தைப்போல உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.