பொழுதுபோக்கு

சங்கீதம் முழுசா தெரியாது, மேடையில் வைத்து திட்டிருக்காரு; யேசுதாஸ் பற்றி மனம் திறந்த எஸ்.பி.பி!

Published

on

சங்கீதம் முழுசா தெரியாது, மேடையில் வைத்து திட்டிருக்காரு; யேசுதாஸ் பற்றி மனம் திறந்த எஸ்.பி.பி!

இந்திய இசை உலகில் ஈடு இணையற்ற பின்னணி பாடகராக வலம் வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன் பாடல் மூலம் மொழி, தேசன் எல்லைகளை கடந்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். எந்தப் பாடலையும் எளிதாகப் பாடும் பாடகர். நாற்பது ஆண்டுகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது வென்றுள்ளார். மேலும்,  பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். அதிக பாடல்களைப் பாடி சாதனை படைத்த பின்னணிப் பாடகர் என்ற பெருமையும் எஸ்.பி.பி-க்கு உண்டு.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், அசாமி, ஒரியா, பெங்காலி, இந்தி, சமஸ்கிருதம், துளு, மராத்தி, பஞ்சாபி என எஸ்.பி.பி குரல் தொடாத மொழிகளே கிடையாது. பாடகர், இசையமைப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர் என்ற பன்முகத் தன்மை கொண்டவர். பாடகர்கள் எஸ்.பி.பி மற்றும் யேசுதாஸுக்கு இடையே மிக நெருங்கிய நட்பு உண்டு. இவர்களை நண்பர்கள் என்பதா? அல்லது சகோதரர்கள் என்பதா? என சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இருவரும் நெருக்கமானவர்கள்.யேசுதாஸும் எஸ்.பி.பி-யும் இணைந்து பல பாடல்கள் பாடியுள்ளனர். இந்நிலையில், யேசுதாஸ் குறித்து எஸ்.பி.பி பேசிய பழைய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதில், “எனக்கு எப்போதும் என் மீது நம்பிக்கை குறைவாகவே இருக்கும். இசையை நான் முறைப்படி கற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லும் பொழுது யேசுதாஸ் என்னை திட்டியிருக்கிறார். மேடையிலேயே திட்டியிருக்கிறார். பொதுவாக யேசுதாஸ் எனக்கு சீனியர். நான் ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து சென்னைக்கு பொறியியல் படிப்பதற்காக வந்திருந்தேன்.எனக்கு தெலுங்கு மட்டும் தெரியும். தெலுங்கில் என்னை அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் கோதண்டபாணி, யேசுதாஸையும் தெலுங்கில் அறிமுகப்படுத்தினார்.யேசுதாஸ் பாடிய பாடல்கள் எல்லாம் கச்சேரியில் நான் பாடியுள்ளேன். பொதுவாக நாங்கள் இருவரும் எப்போதாவது தான் சந்தித்துக் கொள்வோம். அப்போது யேசுதாஸ் மீது எனக்கு பயமும், பக்தியும் இருந்தது. அதன்பின்னர் இருவரும் சேர்ந்து பாடல் பாட ஆரம்பித்ததும் அவர் எனக்கு சகோதரர், குருவிற்கும் மேலாக இருந்தார். எஸ்.பி.பி 50 ஆண்டுகள் நிறைவின் போது உலக பயணம் மேற்கொண்டோம். அப்போது யேசுதாஸிற்கு பாத பூஜை செய்துதான் நான் போனேன். யேசுதாஸ் குரல் கடவுள் கொடுத்த வரம். அவரது குரல் மிகவும் தெய்வீகமானது.எல்லோரும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய  விஷயம் என்னவென்றால் எவ்வளவு வெளிப்படையாக பேசினாலும் மனதில் நீ அந்த சாதி, நான் இந்த சாதி என்று நினைப்பார்கள். ஆனால், யேசுதாஸ் தனது பிறந்தநாளின் போது எப்படி தேவாலயத்திற்கு சென்று பாடுவரோ அதேபோன்று மூகாம்பிகை கோயிலுக்கும் சென்று பாடுவார். எல்லா கோயில், மசூதி, தேவாலயத்திற்கும் செல்வார்.” என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version