இலங்கை
தகாத உறவு ; மனைவிக்கு தகவல் வழங்கிய சார்ஜன்ட் பணி இடைநீக்கம்
தகாத உறவு ; மனைவிக்கு தகவல் வழங்கிய சார்ஜன்ட் பணி இடைநீக்கம்
கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவில் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபர் தொடர்பாக அவரின் மனைவிக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட குற்றப்பிரிவில் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ரஞ்சித் குமார, கடந்த மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சந்தேக நபர் முறையான அனுமதியின்றி அழைப்புகளை மேற்கொண்டு, இரவு பணியில் இருந்தபோது சந்தேக நபர் குறித்த தகவல்களை மனைவிக்கு வழங்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்ற சந்தேக நபர்களுடன், பொலிஸ் சார்ஜன்ட் தகாத உறவு வைத்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் செயல் தொடர்பாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் விசாரணை நடத்தி புதன்கிழமை (5) முதல் அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்தார்.